சாய் தியானாலயாவில் சாயிலீலா.

சாய் தியானாலயாவில் சாயிலீலா.

சாய் தியானாலயாவில் சாயிலீலா.

ஜெயந்தி ஸ்ரீராம்.

நோய் தீர்க்கும் சாயி பிரசாதம்.

அம்பத்தூரைச் சேர்ந்த கீதா சுப்பிரமணியன் என்ற பாபாவின் தீவிர பக்தை ஒருவர் பலநாட்களாக செரிமான கோளாறால் பாதிக்கப்பட்டி ருக்கிறார். என்ன செய்தும் குணமாகவில்லை. நாளடைவில் வயிற்றில் புண் ஏற்பட்டு,சிறிதளவு உணவு கூட உண்ணமுடியாதபடி சிரமப்பட்டிருக்கிறார். 

ஏதேதோ மருத்துவம் பார்த்தும், பூரணமாக குணமாகவில்லை. அதன் விளைவாக கடந்த ஓராண்டாக ஒரு வேளைக்கு ஒரு இட்லி மட்டுமே உணவுவாக எடுத்துக்கொள்கிறார். ஒரு இட்லியைத் தவிர வேறு எது சாப்பிட்டாலும் வாமிட் செய்துவிடுவார். மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி தேதியும் குறித்துக்கொடுத்து விட்டார்கள். அறுவை சிகிச்சைக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கிறது.

இந்திலையில் அம்பத்தூர்  பாபா ஆலயத்தில் நமது சாயி மகராஜ் குருவைதேடி புத்தகத்தை யாரோ கொடுத்திருக்கிறார்கள். அதை வாங்கிப் படித்துப்பார்த்தில் இருந்து குரு அவர்களை நேரில் சந்தித்து பேசவேண்டும் என்ற உந்துதலைப் பெற்றிருக்கிறார்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை குரு தியான வகுப்பில் இருக்கும்போது, காலையில் எட்டு மணிக்கு, கீதா அவர்கள் குருவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விளக்கம்கூறி உங்களை சந்திக்க வேண்டும். எப்பொழுது சந்திக்கலாம் என்று கேட்க, குரு அவர்களோ, நீங்கள் இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்து என்னைச் சந்தியுங்கள். தாமதிக்க வேண்டாம். நான் உங்களுக்காக காத்திருக்கிறேன். என்று கூறி வைத்தார்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் கீதா அவர்கள், அவருடைய கணவர் திரு. சுப்பிரமணியத்துடன் வந்து குருவை சந்தித்தார். அவர்கள் வந்த நேரம் தியானம் நடந்து கொண்டிருந்ததனால்,  முதலில் தியானத்தில் அமருங்கள். பிறகு பேசிக்கொள்ளலாம் என்று அவர்களை தியானத்தில் அமரவைத்தார் குரு.

அரைமணி நேரம் குரு அவர்கள் நிகழ்த்தும் பிரபஞ்ச தியானத்தில் கலந்து கொண்டவர்கள், தியானம் முடிந்ததும், கண்களைத் திறந்து தனது பிரச்சனையை குருவிடம் பகிர்ந்து கொண்டார். குரு அவர்களிடம் அறுவை சிகிச்சை என்று வைத்திருக்கின்றீர்கள் என்று கேட்டார்.

கீதா அவர்கள் நாளைக்கு சாய்ராம். என்று கூற, அதை கவனிக்காததுபோல் குரு என்னை அழைத்து, இவர்கள் இருவருக்கும் காலை உணவு கொடுங்கள் என்று கூற, திருமதி. கீதாவோ உடனடியாக, எனக்கு வேண்டாம் சாய்ராம். என்னால் சாப்பிட முடியாது என்று மறுத்தார்.

குரு அவர்கள், மறுக்காதீர்கள் இது பாபாவின் பிரசாதம். உங்களுக்காக பாபாவின் மேற்பார்வையில் தாயாரானது இந்த பிரசாதம். எளிய உணவுதான். உங்களால் எவ்வளவு சாப்பிட முடியுமோ அவ்வளவு சாப்பிடுங்கள். என்று வற்புறுத்த, கீதா அவர்களோ வேண்டா வெறுப்பாக சாப்பிட அமர்ந்தார்.

முதலில் அவருக்கு இரண்டு இட்லிகள் வைக்கப்பட்டது. அவரும் பயந்துகொண்டே இட்லியை சிறிய துண்டுகளாக்கி உண்ண ஆரம்பித்தார். அந்தநேரத்தில் குரு அவர்கள் பேச ஆரம்பித்தார். நாங்கள் அனைவரும் சாப்பிட்டுக்கொண்டே அவரது பேச்சை கேட்க ஆரம்பித்தோம். 

சிறிது நேரத்தில் குரு அவர்கள் என்னிடம், கீதா அவர்களுக்கு இன்னும் இரண்டு இட்லிகள் வையுங்கள் என்றார். நானும் இரண்டு இட்லிகளை வைக்கப் போனேன். என்ன ஆச்சர்யம் அவர் தட்டில் இருந்த இரண்டு இட்லியையும் உண்டுவிட்டார். அது மட்டுமல்ல அடுத்த இரண்டு இட்லிகளையும் ஆர்வத்துடன் வாங்கி உண்ண ஆரம்பித்தார்.

சிறிது நேரத்தில் வெண் பொங்கல் பரிமாறப்பட்டது. அதையும் சாப்பிட்டார். அவரையே அவரால் நம்ப முடியவில்லை. அவரின் கண்களில் இருந்து ஆனந்தக்கண்ணீர் கொட்டியது. சாப்பிட்டு முடித்துடன் வந்திருந்த அனைவரின் முன்பும் தனக்கு ஏற்பட்ட அற்புத  நிகழ்வை விவரித்தார். 

தீவிர பாபா பக்தையான நான் கடந்த இரண்டு வருடமாக வயிற்றுப் பிரச்சனையால் அவதிப்பட்டு, கடந்த ஒரு வருடமாக, ஒரு வேளைக்கு ஒரு இட்லி மட்டுமே உண்டு வாழ்கிறேன். மருத்துவர்கள் நாளை காலையில் 10 மணிக்கு எனக்கு அறுவை சிகிச்சை வைத்திருக்கின்றார்கள். 

நான் பாபாவிடம் இறுதி நேரத்தி லாவது அறுவை சிகிச்சையிலிருந்து என்னை காப்பாற்றிவிடுங்கள் சாயிநாதா என்று வேண்டிக்கொண்டே இருந்தேன். நேற்று எதேச்சையாக பாபா புத்தகத்தின் மூலம் குருவிடம் பேச வேண்டும் என்று தூண்டப்பட்டு தொலை பேசியில் தொடர்பு கொண்டேன். நாளை எனக்கு அறுவை சிகிச்சை என்பது குருவிற்கு தெரியாது. ஆனால் அவர் உடனடியாக இன்னும் ஒரு மணிநேரத்தில் வந்து என்னை சந்திக்கும்படி கூறினார்.

ஒருவேளை, நாளை வாருங்கள் என்று கூறியிருந்தால் நிச்சயம் நான் அறுவை சிகிச்சைக்குத்தான் சென்றிருப்பேன். இங்கு வந்திருக்க மாட்டேன். அப்படியே வந்திருந்தாலும் நிச்சயமாக சாப்பிட்டிருக்க மாட்டேன். குரு என்ன நினைத்தாரோ, என்னை வற்புறுத்தி சாப்பிடச் சொன்னதால் பயந்து கொண்டேதான் சாப்பிட ஆரம்பித்தேன். கடந்த இரண்டு வருட வாழ்வில் இன்றுதான் நான் நான்கு இட்லியையும் பொங்கலும் சாபபிட்டிருக்கின்றேன். பாபா, குருவின் மூலமாக எனக்கு அற்புததத்தை காட்டியிருக்கின்றார். இனி என் நோய் குணமாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை. குருவிற்கு எனது மனப்பூர்வமான நன்றிகள். என்று கூறி ஆனந்தப்பட்டார்.

குரு அவர்களோ, சாயி பிரசாதத்திற்கு நோய் தீர்க்கும் சக்தியுண்டு என்பதற்கு சாட்சி இதுதான். ஆகவே எங்கு சாயி பிரசாதம் கிடைத்தாலும் தயங்காமல் பெற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு பிரசாதம் கிடைத்த நேரமும்,உங்கள் கர்மவினை தீரும் நேரமும் ஒன்றாக இருந்தால் உடனடியாக உங்கள் நோய்கள் மாயமாய் மறைந்து விடும். அதுவே பகவான் சாயிநாதரின் லீலா விநோதங்கள்.

கலியுகத்தின் கண்கண்ட கடவுளாக சாயிநாதரைப் பணியுங்கள். அவரின் பக்தலீலா விநோகங்களின் மீது நம்பிக்கை வையுங்கள். உங்களுக்கும் அது நிகழும்வரை பொறுமையாக இருங்கள் என்று ஆசி வழங்கி அனுப்பி வைத்தார்.

அதற்குப்பின் திருமதி கீதா அவர்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவில்லை. பகவான் சாயிநாதரின் அணுக்கிரகத்தால் இன்றுவரை எந்த தொந்தரவும் இல்லாமல்  குடும்பத்துடன் மகிழ்சியாக வாழ்ந்து வருகிறார்.

குரு அவர்கள் சிறுவயதில் இருந்து கைகளில் ரட்சையோ, கழுத்தில் மாலையோ எதையும் அணியும் பழக்கம் இல்லாதவர்கள். அதை அணியும்படி யாரையும் கட்டாயப்படுத்தியதும் இல்லை. நாங்கள் ஆயிரம் விசயத்தை உங்களிடம் கூறுவோம். அதில் உங்களது நம்பிக்கையே மிக முக்கியம்.
என்று கூறுவார்.

பிற்காலத்தில் மணிகண்ட மகானின் ஆசீர்வாதத்தால் சந்தனமும், சமயபுரத்தாளின் தரிசனத்தால் குங்குமமும் அணிந்து கொண்டார். பகவான் சாயிநாதரின் அருளால் பிற்பாடு திருநீற்றை நெற்றி நிறைய பூசும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

அப்படிப்பட்ட குரு, பக்தர்களின் பிராரத்தனைகளுக்காக, " சாயி தாயத்து" கொடுக்க ஆரம்பித்தார். அந்த நிகழ்விற்கு குரு எவ்வாறு ஆட்ப்பட்டார். சாயி தாயத்து எவ்வாறு தயாரானது என்று அடுத்த மாதம் காணலாம்.

தொடரும்

***