சாய் மகராஜ் குருவை தேடி 6 ஆம் ஆண்டு விழா. Cover Story
கவர் ஸ்டோரி
சாய் மகராஜ் குருவை தேடி
6 ஆம் ஆண்டு விழா.
நமது சாய் மகராஜ் குருவைதேடி ஆன்மீக மாத இதழின் 6 வது ஆண்டுவிழாவும், 61வது இதழ் வெளியீட்டு விழாவும், சாயி சேவகர்கள் 27 நபர்களுக்கு விருது வழங்கும் விழாவுமாக, முப்பெரும் விழா, கடந்த 13.8.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு சென்னை டி.நகர் காந்திமதி திருமண மண்டபத்தில் கோலாகலமாக நடந்தேறியது.
காலை 8 மணிக்கெல்லாம் வெளியூர்களில் இருந்து பக்தர்கள் வர ஆரம்பித்துவிட்டார்கள். விழா சரியாக 9 மணிக்கு செல்வி.அமிர்தா, செல்வி. அட்சயா ஆகியோர் இறை வணக்கம் பாட இனிதே துவங்கியது.
அதைத்தொடர்ந்து குரோம்பேட்டை "தில்லை நாட்டியாலயா" குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. குழுவினர், பாபாவின் பாடலுக்கு மிகச்சிறப்பாகவும், அற்புதமாகவும் பரதநாட்டியம் ஆடி பக்தர்களை மகிழ்வித்தனர்.
அதைத்தொடர்ந்து நாட்டியம் ஆடிய குழுவினர் அனைவருக்கும் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கினார்கள்.
தொடர்ந்து விழாவினை, சீரடிவாசி, "வாழும் பாபா" சுவாமி அச்சுதானந்தா அவர்கள் தலைமையேற்று விழாவினை தொடங்கி வைத்தார்கள்.
மேலும் விழாவிற்கு வருகை தந்திருக்கும் வி.ஜ.பி களை வரவேற்று பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்கள்.
தொடர்ந்து திரு.அச்சுதானந்த சுவாமிகள், திரு.சுந்தர்சாய், திரு. கலியன் சாய், ஸ்ரீமதி. வல்லபானந்தமயி, ஸ்ரீமதி. உதி. சுனந்தா, திரு. சிவானந்தம், திரு.பிரகாஷ், திரு. தினகர் ஆகியோர் உரையாற்ற அதைத்தொடர்ந்து, ஆசிரியர் அவர்கள் கடந்து வந்த பாதை என்ற தலைப்பில் பக்தர்களிடையே உரையாற்றினார்கள்.
அடுத்ததாக இம்மாத இதழை சுவாமி அச்சுதானந்தா அவர்கள் வெளியிட, 30 வருடங்களுக்கு மேலாக மவுன யோகத்தில் இருக்கும் "சித்த யோகினி" தாயம்மா அவர்கள் பெற்றுக்கொண்டு சிறப்பித்தார்கள்.
தொடர்ந்து குழந்தைகளுக்கு பாபாவின் ஓவியத்திற்கு வண்ணம் தீட்டும் போட்டியும், பெரியவர்களுக்கு, ஓம் சாய்ராம் எழுதும் போட்டியும் நடத்தி பரிசளிக்கப்பட்டது, தொடர்ந்து சிறப்பாக சாயி சேவை செய்தவர்கள் 27 நபர்களுக்கு விருது அளித்து கவுரவிக்கப்பட்டது.
காலையும், மதியமும் சாய் தியானாலயா சார்பில் விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்டது.
அடுத்ததாக திருநின்றவூர் "சாயிநாமதாசன்" திரு. முரளி அவர்களின் நாம சங்கீர்தனம், மிகச்சிறப்பாக நடைபெற்றது. கோவை அன்புச்சகோதரர்கள் திரு.இரவி, திரு. தீபக், திரு.பால்கண்ணன் ஆகியோரின் மேற்பார்வையில் பல்லக்கு சேவை நடத்தப்பட்டது. நமது ஆசிரியரும், குண்டலினி யோகியுமான திரு. ஸ்ரீராம் சாய் அவர்கள் ஏற்கனவே அறிவித்தபடி திருமதி.பாஞ்சாலி சாந்த மூர்த்தி அவர்களுக்கு பக்தர்களின் பலத்த சாயி கோஷங்களுக்கிடையே, "சாயி தீட்சை" வழங்கினார்கள்.
வந்திருந்த பக்தர்கள் அனைவரும் சாயி பகவானின் பல்லக்கை சுமந்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். மாலை 4 மணிக்கு பகவான் சாயிநாதருக்கு
மங்களாரத்திபாடி விழா இனிதே நிறைவு செய்யப்பட்டது.
விழாவில் விருது பெற்ற எங்களது சாயி சேவார்த்திகள்.
சாயி சேவை புரியும் ரத்தினங்களுக்கு, இந்த எளிய விருதை அளிப்பதில் பெருமை கொள்கிறது "சாயி மகராஜ் குருவை தேடி "
ஸ்ரீ வல்லபானந்தமயி அம்மா அவர்களுக்கு "மங்கையர்கரசி" விருதும்,ஸ்ரீமதி.ஹேமலதாநமசிவாயம் அவர்களுக்கு "அன்னமாயி" விருதும்
ஸ்ரீமதி.மாதங்கி பாலாஜி அவர்களுக்கு
"கலைவாணி" விருதும், ஸ்ரீமதி. சாந்தி
அவர்களுக்கு "இறை ஓசை" விருதும்,
ஸ்ரீமதி.புவனா அவர்களுக்கு "வேத ஒலி" விருதும், ஸ்ரீமதி. திலகம். அவர்களுக்கு, "சேவா ரத்தினம்" விருதும், ஸ்ரீமதி. ஜெயந்தி ஸ்ரீராம்
அவர்களுக்கு "இராதாகிருஷ்ணாயி" என்ற விருதும்,
திரு.சிவானந்தம் சாய் அவர்களுக்கு
"ஆத்ம நேசர்" விருதும்,திரு.டி. கோபால் சாய் அவர்களுக்கு "சேவா ரத்தினம்" விருதும், திரு. சந்திரன் சாய் அவர்களுக்கு "காண கந்தர்வன்" விருதும், திரு. முரளிசாய் அவர்களுக்கு
"சாயிநாமதாசன்" விருதும்
திரு. விஸ்வநாதன் சாய் அவர்களுக்கு
"சாயி நேசர்" விருதும், திரு.வேணு கோபால் சாய் அவர்களுக்கு,
"சாயிநேசர்" விருதும், திரு.டி.கார்த்தி கேயன் சாய் அவர்களுக்கு "சாயிநேசர்" என்ற விருதும்,
திரு. பிரசாத் சாய் அவர்களுக்கு
"சேவா ரத்தினம்" விருதும், திரு. தீபக் பாலசுப்பிரமணியன் சாய் அவர்களுக்கு "சேவா ரத்தினம்" விருதும், திரு.இரவிசாய் அவர்களுக்கு
"சேவா ரத்தினம்" விருதும், திரு. பால் கண்ணன் அவர்களுக்கு
"சேவா ரத்தினம்" விருதும், திரு. ஜெயசந்திரன் சாய் அவர்களுக்கு
"சித்திரச் செல்வன்" விருதும்
திரு. ராஜகோபால் சாய் அவர்களுக்கு
"அன்னமாயி" விருதும், திரு.ஏ.சுரேஷ் பாபு சாய் அவர்களுக்கு "சேவா ரத்தினம்" என்ற விருதும்,
திரு. வெங்கடேசன் அவர்களுக்கு
"சித்தர்தாசன்" விருதும், திரு. முத்து மகேஸ்வரன் அவர்களுக்கு
" சித்தர்தாசன்" விருதும் திருமதி. மோனிகா முத்து மகேஸ்வரன்
அவர்களுக்கு "சித்தர்தாசன்" விருதும்
திரு. சுப்பிரமணி அவர்களுக்கு
"சித்தர்தாசன்" விருதும், திரு. முத்துக் குமார் அவர்களுக்கு "சித்தர்தாசன்" விருதும், திரு. சுரேஷ் அவர்களுக்கு
"சித்தர்தாசன்" என்ற விருதும் அளித்து கவுரவிக்கப்பட்டது.
ஆசிரியரின் "கடந்து வந்த பாதை" உரை.
எல்லாம் சாயி! எல்லாமே சாயி!
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!.
மேடையில் வீற்றிருக்கும் எமது முன்னோடிகள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு எனது சிற்றுரையை துவக்குகிறேன்.
2018 மே மாதம் பகவான் சாயிநாதரின் பரிபூரண ஆசீர்வாதத்தால் தொடங்கப்பட்ட நமது சாயி மகராஜ் குருவை தேடி ஆன்மீக மாத இதழ் இம்மாதத்துடன் தனது ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றது.
எவ்வளவோ இடர்கள், எவ்வளவோ தடைகள், அத்தனையும் தாண்டித்தான் ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றோம் என்றால், பகவான் சாயிநாதர் தனது சட்காவால் நைய்யப் புடைத்து விடுவார். இடர் இல்லாத செயல் ஏது? தடைகள்தான் இல்லாது உயர்வு ஏது? உறுதிமிக்கவர்களுக்கு இடர்களும், தடைகளும் எம்மாத்திரம். அதனிலும் பகவான் சாயிநாதரை சற்குருவாக வரித்துக்கொண்டவருக் கெல்லாம் இடர்களும், இடைஞ்சல்களும் கர்மாவை கழிப்பதற்குண்டான வரம் அல்லவா?
புத்தகம் நடத்துவது என்பது உங்களுக்கு வேண்டுமானால் உயர்வாக தெரியலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை அதுதான் எனது கர்மா! கர்மாவை தீர்க்க எளிய வழி கர்மாவை அனுபவித்து விடுவதே!
அதன்படி அனுபவிக்க தயாராகி விட்டால் அதனால் ஏற்படும் வலிகளையும், கஷ்ட நஷ்டங்களையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்ற அருள்வாக்கை திருவாக்காய் நமக்களிக்கும் பகவான் சாயிநாதர் இருக்கையில் ஏது குறை எமக்கு.
முதல் புத்தகத்தில் இருந்து இம்மாதத்தின் 61 வது இதழ்வரை இதையே யாம் கடைபிடிக்கின்றோம். எனவே இடர்களும், தடைகளும், இனிய உறவுகளே எப்போதும் எமக்கு.
கடந்து வந்த பாதையில் கள்ளும் முள்ளும் இருப்பது அனைவருக்கும் இயல்பானதே! ஆனால் அதை தாண்டினோமா அல்லது கள்ளையும் முள்ளையும் பார்த்துக்கொண்டு அங்கேயே நிற்கிறோமா என்பதுதான் கேள்வி. பகவான் சாயிநாதரின் அனுக்கிரகத்தோடு நாம் ஜந்தாம் ஆண்டை தாண்டி இன்று ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைத்துவிட்டோம்
எனவே குற்றம் குறை கூறுபவர்களுக்குப் பதில் கூறிக்கொண்டு காலத்தையும் நேரத்தையும், வீணடிக்காமல், நமக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்தவர்களை நினைந்து நன்றி கூறி, சாயி பக்தியை இன்னும் இன்னும் மக்களிடையே பரப்பி, கடந்து வந்த பாதையை புனிதப் பாதையாக மாற்றிக்கொள்வதே சாய் தியானா லயாவின் கொள்கை! கோட்பாடு!
முதற்கண் வெகுகாலம் சாயி பாதையில் பயணித்து, அநேக பக்தர்களை சாயிபாதைக்குத் திருப்பிய தவயோகி திரு. சாயி பாத மெய்யடிமை அய்யா அவர்களும், சாயி என் வாழ்க்கை உன்னோடுதான் ஆசிரியர் திரு. சிவநேசன் அய்யா அவர்களும் இவ்வருடம் பாபாவின் பாத கமலங்களில் சரண் அடைந்து விட்டார்கள். அவர்களது ஆன்மா சாந்தியடைய இவ்வரங்கத்தில் கூடியிருக்கும் அனைத்து சாய் பக்தர்களின் சார்பாக "சாய் தியானாலயா" பிரார்த்தனை மையம் பகவான் சாயிநாதரிடம் பிரார்த்திக்கின்றது.
சாயி பக்தியிலும், இறைச் சேவையிலும், தன்னலகம் கருதாமல், தன்னுடைய ஓய்வுகாலத்திலும், ஓய்வை விரும்பாது சாயி சேவை செய்து வரும், பாபா பக்தர்களின் முன்னோடிகளான திரு. பாண்டிச்சேரி பாபா மாஸ்டர், திரு. குருவருள் வேண்டி அசோக்குமார் சாய்ராம்,
திரு.கோபால் சாய்ராம் திரு. சுந்தர்சாய்ராம், திரு. கலியன் சாய்ராம் ஆகியோர் பகவான் சாயிநாதரின் பரிபூரண ஆசியுடன் நீள் ஆயுள் நிறை செல்வம் வான் புகழ் பெற்று, நம்மை எல்லாம் பலகாலம் சாயி சேவையில் வழிநடத்திச்செல்ல வேண்டுமாய் பிரார்த்தித்து, அவர்களின் சேவைக்கு தலை வணங்குகிறது. சாய் மகராஜ் குருவை தேடி.
இந்நேரத்தில் இதழ் தொடங்கியதில் இருந்து இன்றுவரை, இதழ் வெளிவருவதற்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வரும் அனைத்து சாய் உள்ளங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி!
ஆண்டு விழா நடைபெற பெரும்பங்கு உதவிகரமாக இருந்த குருவருள் வேண்டி திரு. அசோக்குமார் சாய்ராம் திருமதி ஜெயந்தி முரளி, திரு. அண்ணாமலை, திரு. உதி.மூர்த்தி திரு. இந்துமதி, திரு. மாதங்கி பாலாஜி திருமதி. பிரதீபா தீதி, திரு.அகஸ்டின் திரு. அய்யாகண்ணு,திரு. இராஜசேகர் ஆகியோருக்கு விழாக்குழுவினர் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இருப்பினும் இன்றைய காலகட்டத்தில் இதழின் வளர்ச்சிக்கு அதிக உதவிகள் தேவைப்படுவதால் சாய் பக்தர்கள் அனைவரும் தங்களால் இயன்ற சந்தாதாரர்களை இணைத்தலே உங்களிடம் இருந்து நாங்கள் எதிர்பார்க்கும் பெரும் உதவி.
நமது இதழைப் படிப்பவர்கள் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற முடிந்தவரை ஆயுள் சந்தாதாரர்களை இணைத்து சாயி சேவை செய்வார்களேயானால் இதழ் சிரமமின்றி தொடர்ந்து வெளிவர ஏதுவாக இருக்கும். எமது கோரிக்கையை சாயி பக்தர்கள் செவிமடுத்து ஆவண செய்வீர்கள் என்று நம்புகிறோம்.
அதே போன்று நமது சாயி மகராஜ் மாத இதழ் அற்புதமான சிறப்பான சாயி செய்திகளை தாங்கி வருகின்றது. இதை மற்ற சாய் அன்பர்களும் படித்து பயன்பெற வேண்டும் என நீங்கள் நினைத்தால். 15 ரூபாய் விலை கொண்ட நமது நூலை குறைந்தது 10 புத்தகங்கள் வாங்கினால் 8 ரூபாய்க்கு வழங்க "சாய் தியானாலயா சேவா சங்கம்" முடிவு செய்திருக்கின்றது.
சாய் அன்பர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தங்களால் இயன்ற புத்தகங்களை வாங்கி மற்ற சாய் பக்தர்களுக்கு அளித்து சாயி சேவை புரிந்து பகவான் சாயிநாதரின் அருளைப்பெற்று புத்தகத்தின் வளர்ச்சியிலும் பங்கு பெற வேண்டும் என்பது எங்களது பேரவா.
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!