"சாய் மகராஜ் குருவை தேடி" ஆன்மீக மாத இதழின் 5 ஆம் ஆண்டு துவக்க விழா
கடந்த 7.8.2022 ஞாயிறு அன்று நமது "சாய் மகராஜ் குருவை தேடி" ஆன்மீக மாத இதழின் 5 ஆம் ஆண்டு துவக்க விழா, வெகு விமரிசையாக நடைபெற்றது.
"பாராயண பகலவன்" திரு. சுந்தர் சாய் அவர்களின் தலைமையில் திரு. உதி மூர்த்தி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க,விழா இனிதே துவங்கியது.
காலை 8 மணிக்கு ஆசிரியர் அவர்களின் தியான நிகழ்வுடன் ஆரம்பித்த விழா 9 மணிக்கு "சாயி காணக்குயில்" திருமதி. ஜெயலட்சுமி தேவக்குமார் அவர்களின் பஜனையுடன் தொடர்ந்தது.
காலை 10 மணிக்கு புத்தக வெளியீட்டு நிகழ்வு தொடங்கியது. இம்மாத இதழை, மாருதிபுரம் ஸ்ரீ குரு தத்த பாதுகா சேத்திர ஆலய நிறுவனர் திருமதி மஞ்சரி ரமேஷ்பாபு, அவர்கள் வெளியிட, சம்பூர்ண ஸ்ரீ ஸ்ரீபாத வல்லப சரிதாம்ருத ஆசிரியர் திருமதி. மாதங்கி பாலாஜி அவர்கள் பெற்றுக் கொண்டு சிறப்பித்தார்கள்.
அதைத்தொடர்ந்து நமது இதழின் 5 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, சாயி சேவகர்களில் 21 பேர்களை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கப்பட்டது.
விருது பெற்றவர்களும், அவர்கள் பெற்ற விருதுகளும்.
திரு.பாபா மாஸ்டர் அவர்களுக்கு "பண்பின் சிகரம்"
திரு. சுந்தர்சாய் அவர்களுக்கு "பாராயணப் பகலவன்"
குருவருள் வேண்டி திரு. அசோக் குமார் "இறை நேசர்"
திரு.பா.செந்தில் குமார். " இறை நேசர்"
திரு. ஹரி கிருஷ்ணன். "சேவா ரத்தினம்"
திரு. சாய் சரவணன்."அம்மையின் மைந்தன்"
திரு. சம்பத் சாய் " சேவா ரத்தினம்" .
திருமதி. ஜெயலட்சுமி."சாயி காணக்குயில்"
திரு. வெங்கடேசன். "சித்தர் நேசன்"
திரு. உமா சங்கர் "சாயி நேசன்"
திரு. ஆரணி ரவி "தாஸ்கணுதாசன்"
திரு.இராமமூர்த்தி "சேவா ரத்தினம்"
திரு.உதி.மூர்த்தி "சேவா ரத்தினம்"
திரு.அகஸ்டின் "நம்பிக்கை பொறுமை"
தர்மபுரி முரளி "சாயிநேசன்"
திரு.எல். காமராஜ் "முதல்வன்"
திரு. அண்ணாமலை. "சாயி நேசர்"
திருமதி மஞ்சரி மகேஷ்பாபு "மங்கையர்கரசி"
திருமதி. லதாபாபு "அண்ணபூரணி"
திருமதி. ஜெயந்தி முரளி "சேவா ரத்னம்"
திருமதி. சரண்யா ஞானமூர்த்தி "சேவா ரத்னம்"
என்ற விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
நமது ஆசிரியர் அவர்களுக்கு, திரு சுந்தர் சாய் அவர்கள் சீரடி சாய் தலைப்பாகை அணிவித்து வாழ்த்தினார்கள். கோவை ஆவோ சாயி டிரஸ்ட் தர்மபுரி முரளி அவர்கள் ஆசிரியர் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்தினார்கள்.
விழாவில் திரு. உதி.மூர்த்தி, திரு. இராமமூர்த்தி, திரு.உமா சங்கர், திரு. அண்ணாமலை, திரு.அகஸ்டின் திருமதி.சரண்யா, திருமதி. ஜெயந்தி முரளி, திருமதி. மாதங்கி, திருமதி. மஞ்சரி ஆகியோர் உரையாற்றினார்கள்..
குருவருள் வேண்டி திரு. அசோக்குமார் விஜய் எண்டர்பிரைசஸ் திரு. ஹரி கிருஷ்ணன், மஞ்சு அசோசியேட் திரு. எல். காமராஜ், தர்மபுரி திரு.முரளி கோவை.திரு. கார்த்திகேயன், திரு. திருமலைத் குமார், திரு. ஜெயதுரை குரோம்பேட்டை PSPA பாக்ஸிங் சென்டர் திரு. அய்யாகண்ணு, திரு. இராஜ சேகர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
சென்னை.திரு.அண்ணாமலை, கோவை திரு.கார்த்திகேயன் வேப்பம்பட்டு, திருமதி. சரஸ்வதி கமலக்கண்ணன் ஆகியோர் அன்னதான சேவையினையும், குரோம்பேட்டை PSPA பாக்ஸிங் சென்டர் திரு. அய்யாகண்ணு, அவர்கள் நினைவுப் பரிசு வழங்கும் சேவையினையும், திருமதி ஜெயந்தி முரளி அவர்கள் தாம்பூலம் பை சேவையினையும், திருமதி. திலகம் அவர்கள், உணவு தட்டு சேவையினையும், திரு. ஹரி கிருஷ்ணன் ஷர்மியானா சேவையினையும் சிறப்பாக செய்து தந்தனர்.
விழாவில் பங்கேற்க அனைத்து சாயி சொந்தங்களுக்கும், சிறப்பான அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு ஆதரவற்றோர்கள் 100 நபர்களுக்கு, அவர்கள் இருக்கும் இடம் தேடிச் சென்று அன்னதானம் வழங்கப்பட்டது.
இறுதி நிகழ்வாக, திரு ஆரணி இரவி அவர்கள் சாயி நாத ஸ்வன மஞ்சரி ஒப்புவித்தார்கள். ஆசிரியர் திரு. ஸ்ரீராம் அவர்கள் நன்றியுரை நிகழ்த்த விழா இனிதே நிறைவுற்றது.
***