"சாய் தியானாலயா"
சாய் தியானாலயா "குண்டலினி யோகி" ஸ்ரீராம் அவர்களால் 2014 ல் பொது மக்களின் சேவைக்கென சென்னை அயனாவரத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
சாய் தியானாலயாவில், கிரியா, யோகா, தியானம், யோக சிகிச்சைகள், மவுனம், மனநல ஆலோசனைகள் போன்றவைகள் பொதுமக்களுக்கு கற்றுத் தரப்படுகின்றன.
அதைத்தவிர சற்குரு சாயிநாதரின் மெய்ஞானக் கருத்துக்களை பக்தர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக, "சாயி மகராஜ் குருவைதேடி" என்ற ஆன்மீக மாத இதழும் கடந்த மூன்று வருடங்களாக நடத்தப்பட்டு வருகின்றது.
வியாழன் தோறும், சற்குரு சாயிநாதருக்கு, பூஜை, பஜனை, சத்சங்கம், தியானம், அன்னதானம் போன்றவையும் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகின்றது.
வாரந்தோறும் ஞாயிறுக்கிழமைகளில், சத்சங்கம், தியானம் நடைபெறுகின்றது.
சாய் தியானாலயா சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக, இல்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும், அவர்கள் இருக்கும் இடம் தேடிச்சென்று அன்னதானம் வழங்கும் சேவையினையும் தொடர்ந்து செய்து வருகின்றது.
"அண்டினோர்க்கு அன்னவளமும், வேண்டினோர்க்கு ஞானவளமும்" என்ற கொள்கைப்பிடிப்போடு கடந்த எட்டு வருடங்களாக சென்னை அயனாவரம், அதைச்சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு இவ்வரிய ஆன்மீக சேவையினை வழங்கி வருகின்றது சாய் தியானாலயா....
வரையறுத்துள்ள எல்லைகளை தகர்த்து பெரிய அனுபவங்களைப் பெறுவதே ஆன்மீகத்தின் முழு முயற்சி. அறியாமையால் உருவாகி உள்ள அடையாளத்தில் இருந்து விலகி சிறந்த வழியில் நம்மை உருவாக்கிக் கொண்டு வாழ்வதே ஆன்மீகத்தின் நோக்கம். இதுவே ஆனந்தம். புலன்கள் வெளிப்புற தோற்றத்தைத் தரும். உங்களுக்குள் இருப்பதை நீங்கள் உணரும்போதுதான் நிஜமாகவே நீங்கள் அறிவைப் பெறுகின்றீர்கள்.
மனிதனாய் பிறந்தவற்கு மெய்ஞானமே மிகச் சிறந்தது. உலகியல் அறிவு, சாஸ்திர அறிவு, இசை, நடனம் போன்றவற்றில் அறிவு என்பது போல ஞானத்தில் பல வகை உண்டு. இத்தகைய ஞானங்கள் எல்லாவற்றிலும் புனிதமானது ஆத்ம ஞானம்தான். வாழ்க்கையை நடத்தவும், புகழ் பெறவும் உலகியல் மற்றும் உடலியல் ஞானம் உதவலாம். ஆனால் திருப்தியையும், மன அமைதியையும் தரவல்லது ஆத்ம ஞானம் மட்டுமே.
அத்தகைய ஆத்ம ஞானத்தை மனிதர்களுக்கு உணர்த்தவும், விழிப்புணர்வைப் பெருக்கவும், சாய் தியானாலயா மூலம் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவதே எமது கடமை......
நன்றி!
"சாய் தியானாலயா"
சென்னை -23