லீலை :4 . புதிதாய் கிடைத்த தாலி.

லீலை :4 . புதிதாய் கிடைத்த தாலி.

எங்கள் சபையில் தீப தியானம் என்றொரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அந்நிகழ்ச்சிக்கு பெயர் கொடுத்திருந்தவர்களில் ஒருவர் சத்யபிரியா என்ற சகோதரி.

குறிபிட்ட நாளில் தீப தியானம் ஆரம்பமானது. தீபத்திற்கு பூஜை செய்து விட்டு அப்படியே அந்த தீபத்தையே கண்ணை முடிக்கொண்டு  தியானிப்பதாக ஏற்பாடு.

பெயர் கொடுத்தவர்கள் அனைவரும் வந்து விட்டனர். சத்யபிரியாவை தவிர. சிறிது நேரத்தில் அவரும் வந்து விட்டார். வந்தவருக்கு முகமே சரியில்லை. அழுது,அழுது, முகம் வீங்கிப்போய் இருந்தது. இருப்பினும் ஒருவாறாக சமாளித்துக் கொண்டு ஈடுபாடில்லாமல் தீப தியானத்தில் கலந்து கொண்டார்.

தீப தியானம் ஆரம்பமானது. தீப பூஜையும், தீப தியானமும் முடிந்ததும் குருஜி சத்சங்கம் நிகழ்த்தினார். அதில் பாபா தன்னை நாடிவரும் பக்தர்களின் பிரச்சனைகளையும், நோய்களையும் தீர்க்கும் முறைகளை விவரித்தார்.

பாபா எப்போதும் பக்தர்களின் நோய்களையும், பிரச்சனைகளையும் எதிர் மறையாகவே தீர்த்தருள்வார். காச நோயாளி ஒருவரை கருப்பு நாய்க்கு தயிர் சாதம் வைக்கச் சொல்வது, கண் நோய்க்கு எருக்கம் பாலை விட்டு மாட்டுச் சாணத்தை வைத்து மூடுவது, பாம்பு கடித்தவரை திட்டுவது என்பது போன்ற கதைகளை கூறினார்.

பிறகு தனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தையும் குரு விளக்கினார். தாம் பாபாவிடம் வந்த ஆரம்ப கால கட்டத்தில், தனக்கிருந்த கடனை அடைப்பதற்காக, அவசரமாக ஒரு நிலத்தை விற்க வேண்டியிருந்தது. அந்த நிலம் அவ்வளவு சீக்கிரமாக விற்பனையாவதாக தெரியவில்லை. எவ்வளவோ முயற்ச்சித்தும் பலன் ஏதும் இல்லை. கடன்காரர்கள் வேறு கழுத்தை நெரிக்கின்றார்கள். வேறு ஏற்பாடுகள் பலன் அளிக்கவில்லை.

இறுதியாக பாபாவிடம் பொறுப்பை ஒப்படைத்து,  நீயே கதி என்ற ஒரே சிந்தனைக்கு வந்த மூன்றாம் நாள் எதிர்பாராமல் ஒரு நண்பர் நான் வாங்கிக்கொண்டு உங்களை கடன்களில் இருந்து விடுவிக்கின்றேன் என்று முன் வந்தார். ஆனால் அவரை யாரும் நம்ப மாட்டார்கள். எனக்கு இந்த இக்கட்டான நேரத்தில் அவரை நம்புவதை தவிர வேறு வழியே தெரியவில்லை. என்று பாபாவிடம் முறையிட்டேன். 

மறுநாள் காலையில், அந்த நண்பரே தொலைபேசியில் என்னை அழைத்து இன்றே பதிவு செய்து கொள்ளலாம் உடனே வாருங்கள் என்று அழைக்க, நானும் பத்திரத்தை பாபாவின் பாதங்களில் வைத்து வணங்கி, எந்த பிரச்சனையும் இல்லாது உடனடியாக நிலம் விற்பனையாக வேண்டும் என்று வணங்கிவிட்டு திருநீறு தட்டில் இருந்து திருநீரை எடுத்துக் கொண்டு திரும்புகின்றேன். பாபாவின் காலடியில் இருந்த திருநீறு தட்டு என் பின்புறம் இருந்து யாரோ தூக்கிப் போடுவது போல் என் தலைக்கு மேல் பறந்து வந்து விழுந்து சிதறியது. 

வீட்டின் ஹால் முழுவதும் திருநீறும் குங்குமமும் இறைந்து கிடக்க, நானும் என் மனைவியும் சற்று நேரம் திக் பிரமை பிடித்தது போல் நின்று விட்டோம். என்ன சொல்ல வருகின்றார் பாபா. இது நல்ல சகுணமா? அல்லது கெட்ட சகுணமா? ஒன்றுமே புரியவில்லை. அதே நேரம் தொலைபேசி ஒலிக்க, நண்பர்தான் பேசினார்.புறப்பட்டாச்சா, காலம் தாழ்த்தாமல் உடனே புறப்பட்டு வாருங்கள் என்று அவசரப்படுத்த. எல்லாம் பாபாவின் செயல் என்றவாறே ஐம்பது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பதிவு அலுவலகத்திற்கு குழம்பியபடியே சென்றேன்.

அங்கு எனக்கு நம்ப முடியாத ஆச்சர்யம் காத்திருந்தது. நான் பதிவு அலுவலகம் சென்ற ஒரு மணி நேரத்தில் அனைத்து வேலைகளும் முடிந்து, எனது பிரட்சனைகள் ஏறக்குறைய தீர்க்கப்பட்டு அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் வீடு வந்து சேர்ந்து விட்டேன்.

நான் புறப்படும் போது நடந்த செயல் அபசகுணம் போல் தோன்றினாலும் முடிவை சுபமாக மாறித்தருவதே நமது பாபாவின் கருணையாகும்.

பாபா பக்தர்களில் வாழ்வினில்  இது போன்ற சந்தர்பங்களை ஏற்படுத்தி தன் பக்தனை சோதிப்பார். நாம் அதைப் பற்றி எல்லாம் கவலை படாமல் எல்லாம் பாபாவின் செயல் என்று நம்பிக்கையாகவும் பொறுமையாகவும் இருந்தோமானால் நடப்பது நன்மையாகவே முடியும். 

பாபா தன்னை சோதிக்கின்றார் என்று மனம் வருத்தப்படக் கூடாது. தனக்கு மிகவும் பிடித்தமானவர்களை மட்டுமே பாபா  சோதிப்பார் அதன்மூலமே பாபா தன் பக்தனை நெருங்குகிறார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று குருஜி முடிக்கவும், சத்யபிரியாவின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.

சற்று நேரத்தில் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு குருவிடம் காரணத்தை கூறினார்கள். காலையில் தான் படுக்கையை விட்டு எழும் பொழுது தன் கழுத்தில் இருந்த தாலி இரண்டு மூன்று துண்டுகளாக உடைந்து கீழே விழுந்து விட்டதாகவும், அதனால் தன் கணவருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்ற அச்சப் பட்டதாகவும் அதனால் தான் தீப தியானத்திற்கு வர தாமதமானதாகவும் தெரிவித்தார்.

காலையில் நடந்தது அபசகுணமாக எனக்குத் தோன்றியதால் தீப தியானத்திற்கு போக வேண்டாம் என்று தீர்மானித்திருந்தேன். ஏதோ வேகத்தில் பறப்பட்டு வந்து விட்டேன். நல்லவேலை நான் வந்தது. குருஜி கூறிய பாபாவின் கதைகளைக் கேட்டவுடன் எனக்கே கூறியதைப் போன்று உணர்ந்தேன். பாபா எனக்கும் நன்மையே செய்வார். என்ற நம்பிக்கை எனக்கு இப்போது வந்திருக்கின்றது என்று சற்றே தெளிவாக சென்றார்கள்.

மறுவாரம் மிகுந்த ஆனந்தத்துடன் வந்த சகோதரி, குருஜியிடம் நான்கு பவுன் எடை கொண்ட  புதிய தாலிச் செயினை கொடுத்து பாபாவிடம் வைத்து தரச் சொல்லி அணிந்து கொண்டார். செய்தியை கேள்விப்பட்ட அவரது கணவன் கஷ்டமான காலத்தில் கூட எப்படியோ பணம் புரட்டி நான்கு பவுனில் தாலி செய்து கொடுத்திருக்கின்றார். சாதாரணமாக மனம் வருமா என்ன? எல்லாம் பாபாவின் 


-லீலைகள் தொடரும்.