ஸ்ரீசாயிநாத ஸ்தவன மஞ்சரியின் மகிமை.

ஸ்ரீசாயிநாத ஸ்தவன மஞ்சரியின் மகிமை.

ஸ்ரீ ஷிர்டி சாய்பாபாவைப் போற்றிப் புகழும் "ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி" என்ற துதிமாலை, பாபா சீரடியில் வாழ்ந்த போதே, 1918-ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி கண்பத்ராவ் தத்தாரேய சஹஸ்ரபுத்தே என்ற இயற்பெயரைக் கொண்ட திரு.ஸ்ரீ தாஸ்கணு மகராஜ் அவர்களால் எழுதி முடிக்கப்பட்டது. இதற்குப்பின் 37 தினங்களில், அக்டோபர் 15 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பாபா மஹாசமாதி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்ரீசாயிநாத‌ ஸ்தவனமஞ்சரி ஸ்துதிமாலையில் 146 முதல் 156 வரை உள்ள ஸ்லோகங்கள்,  இந்த ஸ்ரீ சாயிநாத ஸ்தவன மஞ்சரியை படிப்பதினால் கிடைக்கும் பலன்களும், தினமும் இந்த ஸ்தவனமஞ்சரி ஸ்துதியை படிப்பவர்கள் அடையப்போகும் பலவித நன்மைகளைப் பற்றியும் தெள்ளத்தெளிவாக விரிவாக கூறப்பட்டுள்ளது.

தினந்தோறும் தவறாமல் தொடர்ந்து பாராயணம் செய்யப்பட வேண்டிய புனிதநூல் இந்த ஸ்ரீ சாயிநாத ஸ்தவனமஞ்சரி ஆகும்.

இந்த ஸ்ரீ சாயிநாத ஸ்தவன மஞ்சரி ஸ்துதிமாலையானது ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் பரிபூரண ஆசியைப் பெற்ற ஸ்துதியாகும்.

எனவே, சாய் பக்தர்கள் அனைவரும் தவறாமல் பாராயணம் செய்யும்படியும்,  தினமும் நித்யபாராயணம் செய்யும்படியும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி ஸ்துதியைப் தொடர்ந்து படிப்பதனால் கிடைக்கும் பலன்களை கீழ்காணுமாறு ஸ்ரீ தாஸ்கணு மஹாராஜ் கூறுகிறார்,

ஓ.. ஸாயீமஹாராஜ்! இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி ஸ்துதியை யார் யாரெல்லாம் அன்புடன் படிக்கிறார்களோ, அவர்கள் ஒவ்வொருவரின் ஆசைகளையும் தயவுசெய்து நிறைவேற்றுங்கள் !

இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி ஸ்துதியைப் படிப்பவர்களின் மூன்று விதமான தாபங்களும், துன்பங்களும் ஒரு ஆண்டிற்குள் நீங்கிவிடும் என்பதே இந்த ஸ்துதி மீதான உங்களின் நிலைத்த ஆசியாக இருக்கட்டும்.

தினமும் குளித்து முடித்த உடனேயே மனதில் முழுமையான நம்பிக்கையுடன் தொடர்ந்து  இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி ஸ்துதியை நித்யபாராயணம் செய்திடல் வேண்டும் !

அப்படித் தினமும் பாராயணம் செய்ய முடியாவிட்டாலும், வாராவாரம் வியாழக்கிழமை தோறும் பகவான் சாய்பாபாவை வணங்கி, அவருடைய உருவத்தை மனதில் நினைத்து இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி ஸ்துதியை பாராயணம் செய்யுங்கள்.

இதுவும்கூட முடியாவிட்டால், மாதாமாதம் வரும் இரண்டு ஏகாதசி நாட்களில் மட்டுமாவது இந்த ஸ்ரீ சாயிநாத ஸ்தவனமஞ்சரி ஸ்துதியை பாராயணம் செய்யுங்கள்.  அப்படிச் செய்வதினால் ஏற்படும் முழுப்பலனையும்  விளைவுகளையும் கண்டு நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள்.

இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி ஸ்துதியைப் படிப்பவர்களுக்கு இறுதியில் உயர்ந்த அருளினை குருமூர்த்தி அளிப்பார்.  இந்த ஸ்ரீ சாயிநாத ஸ்தவனமஞ்சரி ஸ்துதியைக் கேட்பவர்களுக்கு இவ்வுலக ஆசைகளை உடனடியாக முழுமையாக நிறைவேற்றுவார்.

இந்த ஸ்ரீ சாயிநாத ஸ்தவன மஞ்சரி ஸ்துதியைத் திரும்பத் திரும்ப பாராயணம் செய்வதால் முட்டாள்களுங்கூட கூர்மையான புத்தியைப் பெற்று அறிவாளிகள் ஆவார்கள்.

எவருக்காவது வாழ்நாள் (ஆயுட்காலம்) குறைவாக இருப்பின், இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி ஸ்துதியைப் படிப்பதால் நூறாண்டு காலம் ஆயுள் பெற்றவராகிவிடுவார்கள்.

இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி ஸ்துதியைத் தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால், செல்வம் குறைவாக (ஏழையாக) இருந்தாலும்கூட, குபேரன் அவர்கள் வீட்டில் வந்து தங்கி அவருக்கு சேவை செய்வான்.  இது சத்தியம் இது சத்தியம் இது சத்தியம் என மூன்று முறை கூறுகிறேன்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி ஸ்துதியை தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால், குழந்தைப்பேறு கிடைக்கும்.

இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி ஸ்துதியைத் தினமும் படிப்பவர்களின் வியாதிகள் முற்றிலுமாக குணமாகும்.

இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி ஸ்துதியைத் திரும்ப திரும்ப படித்தால், பயமும் மனக்கவலைகளும் பறந்தோடிவிடும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.  அழிவற்ற பிரம்மஞானத்தை உணர்வார்கள்.

ஓ அறிவுடையவர்களே ! நீங்கள்  இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி ஸ்துதிகளின் மீது முழுமனத்துடனான  உறுதியான நம்பிக்கை கொள்ளுங்கள்.

இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி ஸ்துதியைப் பற்றிய வீணான சந்தேகங்கள்,  தவறான எண்ணங்களுடன் கூடிய அவநம்பிக்கை ஆகியவற்றுக்கு கொஞ்சம் கூட மனதில் இடம் கொடுத்துவிடாதீர்கள் !

இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி பாராயணம் செய்துமுடித்த கையோடு, ஒவ்வொரு நாளும் இரண்டு ரூபாய் காணிக்கையை ஸ்ரீ சாய்நாதருக்கு தட்சணையாக செலுத்தி, உங்கள் பிரார்த்தனைகளை அவருடைய திருவடிகளில் சமர்ப்பணம் செய்யுங்கள். அப்படிச் செய்வதினால் பாராயணம் செய்த பலனை நீங்கள் உடனுக்குடன் பெறுவீர்கள் என்பது நிச்சயம்.

இந்த ஸ்துதியை ஆத்மப்பூர்வமாக மனமொன்றி படிப்பவர்களின் வாழ்வில்  எதிர்பார்த்திராத திருப்பங்களையும், அற்புதங்களையும் பாபா நிகழ்த்துவார் என்பது அனுபவப்பூர்வமான உண்மை என்பதை சாய் பக்தர்களாகிய  நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என்பதுவும் நிச்சயம்.