சாயியின் 11 வாக்குறுதிகள்
ஸ்ரீ சாயிபாபா உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கைக்குரிய அவதாரமாக இருக்கின்றார். சீரடியில் உள்ள அவரது சமாதி பீடத்தில் இருந்து இன்றும் ஏராளமான பக்தர்களுக்கு அருள் புரிகின்றார் என்பது மறுக்க முடியாத ஒன்று.
அவர் நிகழ்த்தும் அனைத்து செயல்களும், அற்புதங்களும், ஒட்டுமொத்த மனித குலத்திற்கான போதனைகளே! இது சாயியிடம் எப்பொழும் இருக்கும் நற்குணமாகும்.
அவருடைய இருப்பை எவன் ஒருவன் உணர ஆரம்பிக்கின்றானோ, அந்த மனிதன் அந்த கணமே மனித நேயமுள்ள மனிதனாக மாறி விடுவான். இதுவே சாயிபாபாவின் அற்புதமாகும்.
ஒருவர் சாயியின் சமாதியில் தலைவைத்து வணங்கும் தருணம் உள்ளிருந்து ஒரு மாற்றத்தை உணரத் தொடங்குவார். அதன் பிறகு சாயி அவருக்கு வழி காட்டுகிறார். அவரது வாழ்க்கையில் இருந்த தடைகளை அகற்றுகின்றார். மேலும் அவர் தன்னை எளிதாக அணுகக் கூடியவராக ஆக்குகிறார்.
சாயிபாபா அவ்வப்போது தன் பக்தர்களிடையே கூறிய மொழிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 11 வாக்குறுதிகளை நாசிக்கின் மம்லத்தாரராக இருந்து ஓய்வு பெற்ற திரு. பண்டிட் மோகினிராஜ் என்பவர் தொகுத்ததாக நம்பப்படுகின்றது.
1.சீரடி தலத்தை எவன் மிதிக்கின்றானோ, அவன் தன்னுடைய பேராபத்தை தூர விரட்டி அடித்து, தன்னுடைய துன்பம் ஒர் முடிவை அடைந்து செளகரியத்தை அடைகின்றான்.
2. சீரடியில் பாபாவின் சமாதி படிகளில் ஏறுபவர்களின் பெரும் துன்பம் விலகி, அவர் மிகுதியான சந்தோசத்தை அடைவர்.
3. நான் என் உடலை விட்டுச் சென்றிருந்தாலும் என் பக்தனுக்காக ஓடோடி வருவேன். அதாவது இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.
4. உங்கள் மனதில் திடமான நம்பிக்கை வைத்திருங்கள். என் சமாதி உங்களது அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றும். என்னுடைய சமாதி என் பக்தர்களுக்கு அநேக ஆசீர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.
5. நான் எப்போதும் உயிருடன் இருப்பதை அறிந்து கொள்ளுங்கள். என்னுடைய பூத உடல் என் சமாதியில் இருந்து பேசும். என்னை உணருங்கள். உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.
6. என்னுடைய சமாதியில் இருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும், தீவிரமாகவும் இருப்பேன். என்னை நம்பி கோரிக்கைகளுடன் வரும் பக்தர்களை நான் வெறும் கையுடன் திருப்பி அனுப்பியிருந்தால் என்னிடம் சொல்லுங்கள்.
7. பக்தர்களின் உணர்வு எவ்வாறு இருக்கின்றதோ, அவ்வாறாகவே என் ரூபம் மாறும். என்னிடம் வருபவர்களுக்கும், என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்தை கேட்பவர்களுக்கும், அவர்களின் எண்ணப்படியே நான் காட்சி கொடுப்பேன்.
8. உங்கள் சுமை என் மீது இருக்கும். என் வாக்குறுதி என்றும் பொய்யாக இருக்காது.அதாவது நீ என்னை அடைந்தால் நான் உன்னை காக்கின்றேன்.
9. அளவற்ற உதவி பெற வாருங்கள். நீங்கள் கேட்பது வெகு தூரத்தில் இல்லை. நீங்கள் என் உபதேசத்திற்காகவும், உதவிக்காகவும் என்னை அடைந்தால் அவைகளை உடனே நான் உங்களுக்குக் கொடுப்பேன்.
10. எவர் ஒருவர் அவரின் வாக்கு, மனம், உடல், ஆகியவற்றால் என்னிடம் சரணடைகின்றாறோ, அவருடைய நன்றிக் கடனை ஒருபோதும் என்னால் திருப்பி செலுத்த இயலாது.
11. என்னைத் தவிர வேறு எவரிடமும் தஞ்சம் அடையாத அந்த பிரத்தியோகமான பக்தன் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவன் மற்றும் பாக்கியசாலியாவான்.
இந்த பதினோரு வாக்குறுதிகளை கேட்கும் பொழுது மிக எளிமையான அர்த்தத்தை அளித்தாலும், பாபாவின் வார்த்தைகள் எப்பொழுதும் மிகவும் ஆழமானதாகவும், மறைமுக அர்த்தங்களையும் கொண்டிருக்கும். அவருடைய ஒவ்வொரு வார்த்தையிலும் வாழ்க்கையின் சாரம் உள்ளடங்கியிருக்கும்.
இந்த பதினோரு வாக்குறுதிகளின் சாரத்தையும், விபரத்தையும், விளக்கமாக எளியோனும் புரிந்து கொள்ளும் விதமாக இந்தி மொழியில் " சாயியின் 11 வாக்குறுதிகள்" என்ற புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார் சாயி பக்தர்களால் " பாய்ஜி" என்று அழைக்கப்படும் திரு. சுமீத் போந்தா அவர்கள்.
பாய்ஜி சிறுவயதில் இருந்தே சாயிபாபாவால் ஈர்க்கப்பட்டார். சாயி மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு பாபாவைப் பற்றி எண்ணற்ற கதைகளைக் கூறுவார். அவர் பாபாவிடம் இருந்து உத்வேகம் பெற்றுள்ளார். பாபாவின் வாழ்க்கைக் கதைகளைக் கூறி பாபாவின் பெயரையும், புகழையும் மக்களிடையே பரப்பிக் கொண்டுள்ளார்.
பாய்ஜி தனது தனித்துவமான பாணியில் ஸ்ரீ சாயி சத்சரிதத்தின் போதனைகளை இக்காலகட்டத்தின் பிரச்சனைகளுடன் தொடர்புபடுத்தி அதன் மூலம் ஏராளமான வாழ்க்கைப் பிரட்சனைகளுக்கு விடை அளிக்கின்றார்.
பதினோரு வாக்குறுதிகளுக்குண்டான விரிவான விளக்கங்கள் அடங்கிய இந்த அற்புதமான நூலை திருமதி சுனந்தா அனந்த்- திருமதி சுந்தரி ராகவேந்திரன் இருவரும் அழகிய நடைமுறைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கின்றார்கள்.
பாபா பக்தர்கள் அனைவரும் படித்து பயன்பெற வேண்டி நூல். புத்தகம் தேவைப்படுவோர் கீழ் கண்ட வாட்ஸ்அப் நம்பரில் தொடர்பு கொள்ளவும்.
வாட்ஸ் அப் நம்பர்: 89890 99789
முகவரி:
SRI SAI AMRITKATHA,
SUMITH BONTHA BHAIJI,
GURUSTHAN CENTER PLOT,
NEXT TO RAM JANKI MANDIR,
A - SECTOR, JANKI NAGAR,
CHUNA BHATTI,
BHOPAL - 462016