வாழ்க்கைத் துணை.

வாழ்க்கைத் துணை.

உங்கள் வாழ்நாளின் இறுதிவரை  உங்களுடன் வரப்போகின்ற  வாழ்க்கைத் துணை யார் என்று நீங்கள் சிந்தித்திருக்கின்றீர்களா? இதுவரை சத்தியமாய் நினைத்துப் பாத்திருக்கவே மாட்டீர்கள். சரி, இப்போதாவது சற்று யோசிப்போம்!

அம்மா, அப்பா, மனைவி, மகன்,
மகள், கணவன், நண்பர்கள், உற்றார், உறவினர்கள்…..இதில் ஒருவரும் உங்களுடன் வரமாட்டார்கள். சரி தானே!

அப்படியானால், இறுதிவரை உங்களுடன் வரப்போவது உங்கள் உடல் மட்டுமே! அதுவே உங்கள் உண்மையான வாழ்க்கைத் துணை,                                                                         
உங்கள் உடல் செயல்படுவதை நிறுத்திவிட்டால் உங்களுடன் யாரும் இருக்கப்போவதில்லை.

பிறப்பிலிருந்து இறப்பு வரை உங்களுடன் இருக்கப் போவது உங்கள் உடம்பு மட்டும் தான். உங்கள் உடம்புக்காக நீங்கள் எவ்வளவு பொறுப்புணர்வுடன் இருக்கிறீர்களோ,
அந்த அளவுக்கு உங்கள் உடம்பு உங்களைப் பார்த்துக் கொள்ளும்.

நீங்கள் என்ன உண்கிறீர்கள்,
என்ன உடற்பயிற்சி செய்கிறீர்கள்,
எந்த அளவுக்கு உடலுக்கு ஓய்வு தருகிறீர்கள், மன அழுத்தத்தை எவ்வாறு கையாளுகிறீர்கள்
என்பதையெல்லாம் பொருத்துத்தான் உங்கள் உடம்பு உங்களைப் பாதுகாக்கும்.

உங்கள் உடம்பு மட்டும்தான் நீங்கள் வாழும் வரைக்கும் நிலையான உங்களுக்குரிய விலாசம் என்பதை ஞாபகத்தில் வையுங்கள்!
உங்களைத் தவிர வெளி ஆட்கள் வேறு யாரும் உங்கள் உடம்பிற்கு பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

மூச்சுப் பயிற்சி- நுரையீரல்களுக்கு...
தியானப் பயிற்சி - மனதிற்கு...
யோகாசன பயிற்சி - முழு உடம்பிற்கு...
நடைப்பயிற்சி - இதயத்திற்கு...
சிறந்த உணவு - ஜீரண உறுப்புகளுக்கு...
நல்ல எண்ணங்கள் -  ஆன்மாவிற்கு...
நற்செயல்கள் - உலகிற்கு…

உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால், அதுவே எந்த கால நிலைக்கும் தக்கவாறு, தன்னைத்தானே சரி செய்து கொள்ளும். சுற்றுச்சூழலைப் பற்றி குற்றம் சொல்ல வேண்டியிருக்காது.

தன் உடலை சரியாக வைத்துக் கொள்ளாமல், இது ஒத்துக் கொள்வதில்லை, அது ஒத்துக் கொள்வதில்லை, என்று புகார் சொல்வாரகள். ஒத்துவராமை வெளியே இருந்து வருவதல்ல, ஆரோக்கிய குறைவால் வருவதே! 

உடல் வாழ்க்கை முழுவதும் உடன் வரப்போகின்ற உங்கள் உடலுக்கு போதிய வலிமை இருந்தால் உங்களுக்கு எதுவும் ஒத்து வராமல் இருக்க வேண்டியதில்லை.

வெப்ப மண்டல இடங்களில் வாழும் மக்களை நினைத்துப் பாருங்கள். அங்கு வெப்பமும், ஈர நிலையும் மிக அதிகம். நல்ல வேளையாக உடல் எந்த நிலையையும் தாங்கி அதற்கேற்ப சரி செய்து கொள்ளும். ஏனெனில் அது அவ்வாறு படைக்கப்பட்டுள்ளது. நாம் அதை சரியாக பராமரித்தால் போதும்.

எத்தனை பேருக்கு தான் எதை சாப்பிட்டால் முழுமையாக செரித்துவிடும் என்று தெரியும்? தன் உடலுக்கு ஒத்துப் போகும் உணவுகள் எது என்று தெரியுமா?

எனவே உடலைப் பேணுக! தக்க பயிற்சிகளை செய்க! சரியான உணவை சரியான நேரத்தில் உண்க. எல்லாவற்றிற்கும் மேலாக நல்ல எண்ணங்களையே எண்ணுக!

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். இதை உணர்ந்து வாழ்க்கையை முறையை மாற்றுவோம். வாழ்வாங்கு
வாழ்வோம்…

வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!


***