சித்தர்கள் யார்?
சித்தர்கள் யார்?
நமது முன்னோர்களின் வரலாற்றில் மிகவும் மர்மமான மற்றும் ஆச்சரியமான ஒரு பக்கம் என்றால் அது 'சித்தர்கள்' பற்றியதுதான். பலருக்கு அவர்கள் கடவுளின் அவதாரங்களாகத் தெரிகிறார்கள், இன்னும் சிலருக்கு அவர்கள் இயற்கையின் ரகசியங்களைக் கண்டறிந்த ஆதி விஞ்ஞானிகளாகத் தெரிகிறார்கள். உண்மையில் சித்தர்கள் யார்? அவர்களின் நோக்கம்தான் என்ன?
அவர்கள் நிலையில்லா மனித வாழ்வைச் சுட்டிக்காட்டிய மெய் ஞானிகள்.
"ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு." என்று பாடிய திருமூலர், மனித வாழ்வின் நிலையாமையை மிகத் துணிச்சலாக உலகுக்கு உணர்த்தியவர். உடல் அழிந்து போகக்கூடியது என்பதை உணர்ந்த அதே வேளையில், அந்த உடலையே 'காயகல்பம்' போன்ற கலைகளால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அழியாமல் காக்கும் வழிமுறைகளையும் கண்டறிந்தவர்கள் சித்தர்கள்.
யார் இந்தச் சித்தர்கள்? 'சித்தி' அல்லது 'சக்தி' பெற்றவர்களே சித்தர்கள் எனப்படுகிறார்கள். இவர்கள் வெறும் ஆன்மீகவாதிகள் மட்டுமல்ல, இவர்கள் மருத்துவர்கள், வேதியியலாளர்கள், வானியல் அறிஞர்கள் மற்றும் தத்துவஞானிகள். உண்ணாமல், உறங்காமல், காலங்களைக் கடந்த நிலையில் இறை உணர்வோடு ஒன்றி இருப்பதே இவர்களது முதன்மையான நிலை.
காற்றில் பறப்பது, கூடு விட்டு கூடு பாய்தல், உடலைச் சிறுதாக்குதல், பெரிதாக்குதல் போன்ற அட்டமா சித்தகளை இவர்கள் கைவரப் பெற்றிருந்தனர். நவீன அறிவியலுக்கு முன்னோடிகள் அன்று நவீன ஆய்வகங்கள் இல்லா விட்டாலும், காடுகளிலும் குகைகளிலும் இவர்கள் செய்த ஆய்வுகள் இன்றைய நவீன அறிவியலுக்குச் சவால் விடுபவை.
அருகிலுள்ள மூலிகைகளைக் கொண்டே தீர்க்க முடியாத நோய்களைத் தீர்க்கும் முறையைத் தந்தனர். சாதாரண உலோகங்களைத் தங்கமாக மாற்றும் ரசவாத முயற்சியில் ஈடுபட்டனர். இதுவே இன்றைய வேதியியல் துறைக்கு அடித்தளமாக அமைந்தது. பதினெண் சித்தர்களில் ஒருவரான போகர், பழனி மலையில் நவபாஷாண சிலையை வடித்தவர். இவர் ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்து, அங்குள்ள மக்களிடையே ஆன்மீக மற்றும் தற்காப்புக் கலைகளைப் பரப்பினார்.
இவர் தான் “போதிதர்மர்” என்றழைக்கப்பட்டதாக பல வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. இன்றும் ஜப்பானில் போகரின் அடையாளங்கள் காணப்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். சித்தர் மரபு தமிழகத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை. நமது இலங்கையிலும் மகத்தான சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். யோகர் சுவாமி, செல்லப்பா சுவாமி, குடை சுவாமி போன்ற ஈழத்துச் சித்தர்கள் மக்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள். அவர்கள் அருளிய ஞானப்பாடல்கள் இன்றும் ஈழத்து மண்ணில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
நாமும் சித்தராக முடியுமா? "கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்" என்பது பொது மொழி. ஆனால் "கடவுள் உனக்குள்ளேயே இருக்கிறார்; உன் உடலே ஆலயம்" என்பது சித்தர் மொழி. யார் ஒருவர் தனது ஐம்புலன்களை அடக்கி, அகத்தாய்வு செய்து, இயற்கையோடு இயைந்து வாழ்கிறாரோ, அவர் சித்தர் நிலையை அடைய முடியும். இது ஏதோ ஒரு மந்திர வித்தை அல்ல, இது ஒரு வாழ்வியல் கலை.
சித்தர்கள் கடவுளும் அல்ல, வெறும் மந்திரவாதிகளும் அல்ல. அவர்கள் இந்த பிரபஞ்சத்தின் ரகசியங்களை மனித குலத்தின் நன்மைக்காகக் கண்டறிந்த 'மெய்ஞான விஞ்ஞானிகள்'. அவர்களின் வாழ்க்கை முறை நமக்குச் சொல்வது ஒன்றே ஒன்றுதான் "உன்னையே நீ அறிவாய்!” அதுவே இன்றைய “போதி தர்மர்” நமது குருஜி யோகி ஸ்ரீராம் பாபா அவர்களால் நமக்கெல்லாம் பயிற்றுவிக்கும் தன்னையுணர்தல் என்ற ஆத்மஞானமே அது.
சத்சித்ஆனந்தம். குரு வாழ்க! குருவே துணை!
*******