ஜி.கே. ரேகேயின் நினைவலைகள்.

ஜி.கே. ரேகேயின் நினைவலைகள்.

நான் இந்தூரில் தாசில்தாராக பணி செய்து ஓய்வு பெற்றவன். 1912 ல் நான் இடுப்பு பிடிப்பால் மிகவும் அவதிப்பட்டேன். அடிக்கடி காய்ச்சலும் வந்து என்னை பாடாய்ப்படுத்தியது. என்னால தூங்கவோ, ஓய்வெடுக்கவோ, முடியவில்லை. ஆகவே நான் ஹர்தா அருகில் உள்ள ஜிக்காம் என்ற கிராமத்தில் இருந்த என் மாமனார் வீட்டிற்குச் சென்றேன்.

என் மாமனார் தீவிர சாயி பக்தர். நான் அவரிடம் சென்ற அன்று சாயி பாபாவின் உதியை எனக்கு இட்டுவிட்டார். அன்றே  பிற்பகல் இரண்டு மணிக்கு நான் கட்டிலில் படுத்திருக்கும் போது காவி கட்டிய சன்யாசி ஒருவர்  என்னருகே வந்து என் தோள்களில் தட்டி, " குழந்தாய் கவலைப்பட வேண்டாம். இன்னும் மூன்று தினங்களில் நீ குணமடைவாய்.  என்று கூறினார்.

நான் உடனே, ஒரு சன்யாசி வந்திருப்பதாகவும், அவர் கூறியதையும் கூறி என் மாமனாரைக் அழைத்தேன். அவர் அந்த சன்யாசியை காண விரும்பினார். ஆனால் அவர் வருவதற்குள் சன்யாசி சென்று விட்டார். அது சாயிபாபாவகத்தான் இருக்க வேண்டும் என உறுதியாக அவர் கருதினார்.

அன்றிலிருந்து சரியாக மூன்றாவது நாள். நான் வியப்புறும் வகையில் என் வலி முழுமையாக குணமடைந்தது. நான் பூரணமாகக் குணமடைந்தேன். என் மாமனார் சீரடிக்குச் சென்று பாபாவை தரிசிக்குமாறு என்னிடம் கூறினார்.

ஆனால் அதன் பின் இரண்டு வருடங்களாக என்னால் சீரடிக்கு செல்ல முடியவில்லை.1914 ஆம் ஆண்டில் மண்டலாவில் என் மூன்றாவது பெண்ணின் திருமணத்திற்காக நான் விடுமுறை எடுத்துக் கொண்டேன். பாபாவிற்கு நாங்கள் திருமணப் பத்திரிக்கை அனுப்பி வைத்தோம். அதற்கு பாபாவிடம் இருந்து, நான் நேரில் வந்து திருமண்ததில் பங்கு கொள்வேன் என்று பதில் வந்தது.

திருமண விழா நடந்து கொண்டிருந்தபோது, பாபாவிடம் இருந்து உதியுடன் ஒரு கடிதமும் வந்தது. திருமணத் தம்பதிகளுக்கு உதியை இட்டுவிடும் படி அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அன்றைய தினத்திலேயே, ஒரு பக்கீர் வந்து ஒரு பைசா கேட்டார். ஆனால் என் மாமனார் அந்த வாய்ப்பை உதாசீனம் செய்து விட்டு பின்னால் வருந்தினார்.

அந்த பக்கீர் பாபாகத்தான் இருக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார். அது பாபாவேதான். ஆனால் அவர் மீண்டும் வருவார் என நான் கூறினேன். மறுநாள் வேறொரு பக்கீர் ஒருவர் வந்து என்னிடம் ஒரு பைசா மட்டுமே கேட்டார். நான் அதைக் கொடுத்தேன். அதை மட்டும் பெற்றுக்கொண்ட பக்கீர் என் மாமனார் அளித்த விருந்தை ஏற்காமல் சென்று விட்டார்.

திருமணம் முடிந்த உடன் நான் சீரடிக்குச் சென்று அங்கு நான்கு நாட்கள் தங்கினேன். என்னைப் பார்த்தவுடன் பாபா, "ஏன் இவ்வளவு தாமதம்?" எனக்கேட்டார். அதற்கு நான் ஏழ்மை குமாஸ்தா என்றும், எளிதில் வர இயலாது என்றும் பதிலளித்தேன். அவர் என்னிடம் தட்சிணை கேட்டார். நான் ஐந்து ரூபாய் அளித்தேன். அவர் மேலும் ஐந்து ரூபாய் வேண்டும் என்று கேட்டார். அது ஏன் என்று எனக்குத் தெரியாது. ஆயினும் மேலும் ஐந்து ரூபாய் தட்சிணை அளித்தேன்.

அப்போது பாபா, உன்னிடம் இருந்து வரவேண்டிய பாக்கிகள் ஏதுமில்லை என்றார். சீரடியில் இருந்து என் வீட்டிற்கு திரும்பிய போதுதான் அதற்குண்டான விளக்கம் எனக்குத் தெரிந்தது. என் மனைவி எனக்குத் தெரியாமலே பாபாவிற்கு காணிக்கையாக ஐந்து ரூபாயை மணியார்டர் செய்திருக்கிறாள். அது பின்னர் நேரில் பெற்றுக்கொள்ளப் படும் என்ற குறிப்புடன் திரும்பி வந்து விட்டது. பாபா நேரில் அதிகமாக ஐந்து ரூபாய் பெற்றுக்கொண்டது அதனால்தான்.

நான்கு வயதான என் கடைசிப் பிண் பிரேமாபாய்க்கு காய்சல் வந்து நிலமை கடுமையாகி விட்டது. அவள் எலும்பும், தோலுமாகி விட்டாள். மருந்துகளும், சிகிச்சைகளும் பலனளிக்கவில்லை. பாபாவின் பக்தையான என் மனைவி, குழந்தைக்கு உதவும்படி பாபாவிடம் பிரார்த்தித்தாள்.

அவள் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் போதே," மூன்றாம் நாள் எல்லா கஷ்டத்தையும் அகற்றி விடுவேன்" என்ற பாபாவின் குரலைக் கேட்டதாகக் கூறினாள். மூன்றாம் நாள் தாயின் மடியிலேயே எங்கள் பெண் குழந்தை உயிரை விட்டது எங்களுக்கு வியப்பளித்தது.

ஆபீசில் இருந்த எனக்கு என் மனைவி தகவல் அனுப்பினாள். உடனே வீட்டிற்கு வந்த நான், என் பெண் இறந்து விட்டதைக் கண்டேன். என் மனைவி அழுது கொண்டிருந்தாள். நான் குழந்தையை தூக்கி மடியில் இருத்தி, பாபாவின் உதியுடன் சேர்த்து கங்கா நீரை ஓரளவு வாயில் ஊற்றினேன். நீர் வெளியே வழியவில்லை. ஆகவே நான் மேலும் சிறிது நீரைப் புகட்டினேன். அப்போது குழந்தையின் கண்கள் திறந்தன.

அவள் உயிருடன் இருப்பது உறுதியாயிற்று. அதன் பிறகு அவளுக்கு தொடர்ந்து உதியும் தீர்த்தமும் அளித்தோம். ஒரு மாதத்தில் அவள் பூரண ஆரோக்கியம் பெற்றாள்.
இப்போது திடகாத்திரமாக இருக்கும் அவள் இந்தூர் பள்ளி ஒன்றில் தலைமைச் செவிலியராக பணிபுரிகின்றாள்.

1926 ஆம் ஆண்டு என் மனைவி காலமானாள். அதன்பின் என் உடல் நிலைப் பாதிக்கப்பட்டது. என் முன் பாபாவின் புகைப்படத்தை வைத்திருந்தேன். அதையே பார்த்துக்கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் அதில் இருந்து ஒரு குரல் வருவது போன்றிருந்தது. "இனியும் வேலைக்குப் போக வேண்டாம்"  தொடர்ந்து மூன்று நாட்கள் இந்தக் குரல் கேட்டது. பேசியது யாராக இருக்கும் என என்னால் கண்டுபிடிக்க முடகயவில்லை.

என் நண்பர் மருத்துவர் பர்னேர்கர், அந்தக் குரல் கண்டிப்பாக பாபாவுடையதாகத்தான் இருக்க வேண்டும் என்று கூறினார். ஆகவே நான் 1926 ல் ஓய்வூதியத்துடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றேன்.

அதற்கு முன்பு எனது நான்காவது பெண் மீனாபாய்க்கு மணம் முடிக்க வேண்டும் என்று முயற்சி செய்தேன். வரன் எதுவும் கிடைக்கவில்லை. நான் ஏற்கனவே அலுவலகத்தில் விடுமுறை எடுத்துக் கொண்டேன். மத்திய பிரதேசத்தில் உள்ள என் என் மைத்துனர் வீட்டிற்கு நானும் என் மனைவியும் சென்றோம்.

அங்கு போய் சேர்ந்த மூன்றாவது தினம், "ஜீராப்பூருக்கு போ" என்றொரு குரல் கேட்டது. நான் உடனே இந்தூருக்கு திரும்பினேன். ஏற்கனவே அலுவல் நிமித்தம் என் மகனுக்கு ஜீராப்பூர் போக உத்தரவு வந்தும் அவனது மனைவி ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்ததால் அவனால் போக முடியவில்லை. 

அப்போது ஓர் அதிசய சம்பவம் நிகழ்ந்தது. நான் இந்தூருக்கு வந்தவுடன் என்னை ஜீராப்பூருக்கு மாறிறியதாகவும் நான் உடனே ஜீராப்பூருக்கு செல்ல வேண்டும் என்றும் என் அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்திருந்தது. ஆகவே நான் ஜீராப்பூருக்கு சென்று வேலையை ஒப்புக்கொண்டேன். 

அங்கிருந்து நான் வேலை விசயமாக இர் வாரங்களுக்கு டூர் செல்ல வேண்டியிருந்தது. நான் ஸயாத் என்ற ஊரில் தங்கினேன். அங்கே குவாலியர் சமஸ்தானப் பணியில் என் சகோதரர் இருந்தார். நான் அவர் வீட்டுக்குச் சென்றேன். அங்கே அவருடன் பலவந் என்ற ஒருவரைக் கண்டேன். அவர் உண்மையில் பலவானாக இருந்தார். பருமனாகவும் அழகாகவும் இருந்தார். நான் அவரைப் பற்றி விசாரித்ததில் அவர் என் மகளுக்கு பொருத்தமான வரன் எனக் கருதினேன். அது நிச்சயமாகி திருமணம் சிறப்பாக நடந்தேறியது.

இவ்விதம் என் வாழ்க்கை முழுவதிலும் சாயிபாபாவின் கருணை எனக்கும் என் குடும்பத்திற்கும் இருந்தது என்பதை பெருமையாக கருதுகின்றேன்.

*******