குருபூஜை.

குருபூஜை.

குருபூஜை.

இராஜசேகர்.

காவிரிக்கரையில் ஓர் பரமஹம்சர், ஸ்ரீ இராமா சாது  அவர்களின் 130 வது குருபூஜை விழா கடந்த 23.06.25 திங்கட்கிழமை அன்று கும்பகோணம் கீழக் கொட்டையூர் ஸ்ரீ சாதனா நிகேதனத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. காலை 6 மணிக்கு  திருவருட்பா அகவல் பாராயணமும், அதைத்தொடர்ந்து சோதி வழிபாடும் நடத்தப்பட்டு அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

10 மணிக்கு சற்குரு நாதர் ஸ்ரீ இராமா சாது அவர்களுக்கு அபிசேக ஆராதனை குருவந்தனம், செய்து ருத்ரம் சமர்ப்பிக்கப் பட்டது. 11 மணிக்கு திருவண்ணாமலை சுவாமிகள். திரு. மாத்ருசேவானந்த மகராஜ் அவர்களின் பஜனை நிகழ்ச்சியும் மதியம் 12 மணிக்கு, மகா தீபாராதனை, புஷ்பாஞ்சலியும் மதியம் 1.00 மணிக்கு அன்னதானமும் நடைபெற்றது.

மாலை 5.30 க்கு ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம மஹாஅர்ச்சனையும், இரவு மங்கள ஆரத்தியும் வெகு சிறப்பாக நடத்தி வைக்கப்பட்டன. ஸ்ரீ இராமாசாதுவின் பக்தர்களும், சீடர்களும் பெருமளவு கலந்து கொண்டு சிறப்பித்தனர். சுவாமிகள் நமது குரு யோகி ஸ்ரீராம் பாபா அவர்களின் தீட்சா குரு என்பதும், குரு தமது சிறுவயதில் இருந்தே அவருடன் இருந்து அவருக்கு சேவை செய்திருக்கின்றார் என்பதும் நமக்கு எல்லையில்லாத பேரானந்தம்.

சுவாமிகள் தமது இளம் வயதிலேயே வடநாட்டில் இருந்து இங்கு வந்துவிட்டார். ஆரம்பத்தில் இருந்தே அருட் தந்தை ஸ்ரீ இராமதாஸ் அண்ணா அவர்களின் பராமரிப்பில் இருந்து வந்த சுவாமிகள் தமது கடுமையான தவப்பயிற்சிகளை மேற்கொண்ட இடமாதலால் அங்கு எப்போதும் தவ ஆற்றல் நிரம்பி வழிவதை உணர முடிகின்றது.

ஏதும் உபாயங்களின்றி கண்களை மூடி சற்று நேரம் அமர்ந்திருந்தாலே. சுவாமிகளின் சமாதி ஆலயத்தில் அமைதி தானாக வந்து நம்மை சூழ்ந்துவிடும். தமது சிறுவயதில் யோகி ஸ்ரீராம் பாபா சுவாமிகளிடம் அமர்ந்திருக்கும்போது சுவாமிகள்  “ஆனந்தத்தை அசைவு மறைக்கின்றது. அசைவை நிறுத்து ஆனந்தம் வெளிப்படும்” என்ற கூறிய வாக்கியங்கள் இப்போது நினைத்தாலும் காதில் ஒலிக்கின்றது என்று பழைய நினைவுகளில் முழ்கினார். 

ஞானிகள், யோகிகளின் சித்த பீடங்கள் எல்லாம் நமக்கு தெய்வ சன்னதிகளைவிட கூடுதல் ஆன்மீக அதிர்வலைகளை அளிக்க வல்லவைகள். பக்தர்கள் இதுபோன்ற ஆன்மீக மையங்களுக்குச் சென்று  தங்களது வாழ்வை மேம்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ஆலய முகவரி:
ஸ்ரீ இராமார்ப்பணம் டிரஸ்ட்
வள்ளலார் கல்வி அறநிலயங்கள்,
கீழக்கொட்டையூர், கும்பகோணம்- 2