தாதா மகராஜ்
தாதா மகராஜ் ரத்னகிரி மாவட்டத்தில் பட்காவ்ன் என்னும் சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் நவநாத சித்தர்களின் சம்பிரதாயத்தை பின்பற்றினார். ஆன்மீகத்தில் மிக உயர்ந்த ஆன்மாவாகத் திகழ்ந்த அவர் ஏழை எளிய மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பல உதவிகள் செய்து மிகவும் பிரபலமாக இருந்தார். அவரது இயற்பெயர் பாலகிருஷ்ண கேஷவ் வைத்யா
ஆயினும் அனைத்தையும் விட தீய ஆவிகளை விரட்டுவதில் அவர் மிகப் பிரபலமாக அறியப்பட்டார். தாதா மகராஜூம், சாய்பாபாவும் சமகாலத்தவர்கள். ஆனால் இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டதில்லை. இருப்பினும் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மற்றவரைப்பற்றி முழுமையாக அறிந்திருந்தனர். உண்மையில் அவர்களுக்கிடையே டெலிபதி மூலம் கருத்துப் பரிமாற்றம் இருந்தது.
மும்பையில் ஒரு குடும்பஸ்தனை ஒரு தீய ஆவி பிடிந்திருந்தது. அந்த மனிதனைப் பாடாய்படுத்திய அந்த ஆவி அவனை மிகவும் கொடூரமானவனாகவும், வன்முறையாளனாகவும் ஆக்கி வைத்திருந்தது. காண்பவர்களை எல்லாம் உடலளலவில் கடுமையாக தாக்கி காயப்படுத்தினான். அவனது குடும்பத்தினர் பல்வேறு தீர்வுகளை முயன்று பார்த்தும் ஒரு பயனுமில்லை. நாளுக்கு நாள் அவனது வெறியாட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றதால் அவனை அவனது வீட்டார் கயிற்றால் கட்டி வைத்திருந்தனர்.
அதே சூழலில் அவனை சீரடிக்கு இழுத்துக் கொண்டு வந்தனர். அவனைப் பார்த்ததும் பாபா கூறினார் "அர்ரே! இவனை மிக வலிமையான பேய் ஒன்று பிடித்துக் கொண்டுள்ளது. என்னால் இவனை குணப்படுத்த முடியாது. இவனை பட்காவ்னைச் சேர்ந்த பாலாவிடம் கூட்டிச்சென்று, தாதா மகராஜிடம் நான் அனுப்பியதாக கூறுங்கள்" என்றார்.
பாபாவின் அறிவுரையின்படி, அந்தக் குடும்பம் அவனை பட்காவ்னுக்கு அழைத்துச் சென்றது. பட்காவ்ன் எங்கிருக்கின்றது என்று விசாரித்து அங்கு இழுத்துச் செல்வதற்கு அவர்களுக்கு 15 நாட்கள் ஆனது. அவர்கள் அங்கு செல்வதற்கு முன்பாகவே, தாதா மகராஜ் தன் நெருக்கமான பக்தர்களிடம், சீரடி சாய்பாபா கொடுரமான வன்முறை குணம்கொண்ட ஒரு பைத்தியக்கார மனிதனை தன்னிடம் அனுப்பியுள்ளதாகச் சொன்னார்.
அந்த குடும்பத்தினர் அதற்கு முன் தாதா மகராஜை பாரத்ததில்லை. தவிரவும் தாதா சன்னியாசிகள் போல் உடை அணியவும் இல்லை. ஆதலால் அவர்களால் அவரை அடையாளம் காணமுடியவில்லை. ஆனால் பேய் பிடித்த அந்த மனிதன் அவரை சரியாக அடையாளம் கண்டு அவரின் பாதத்தில் சென்று விழுந்தான்.
தாதா மகராஜ் அந்த மனிதனை தன்னோடு எட்டு நாட்கள் தங்கியிருக்கச் செய்து அவனை பீடித்திருந்த தீய ஆவியை விரட்டி அடித்து அவனை நலம் பெறச்செய்தார். அந்த குடும்பஸ்தன் பட்காவ்னை விட்டு செல்லும் போது அமைதியாக, தெளிந்த, சாந்தமான மனநிலையைப் பெற்றிருந்தான்.
ஒருசமயம் தாதாவின் பக்தர்கள் பட்காவ்னுக்கு வந்து அவரை தரிசித்துவிட்டு, அவரிடம் சீரடிக்குச் சாயிபாபாவை தரிசிக்கச் செல்ல அனுமதி கேட்டனர். இதைக்கேடட தாதா மகராஜின் முகம் ஆனந்தத்தால் மலர்ந்தது. உடனே அவர்களிடம், தங்க சரிகை வேலைப்பாடுகள் செய்த ஒரு சால்வையைக் கொடுத்து, " இந்த துணியை பாபாவின் கைகளில் கொடுத்து நமஸ்காரம் செய்யுங்கள் மற்றபடி வேறொன்றும் சொல்லத் தேவையில்லை" என்றார்.
அவரது பக்தர்களும் சீரடிக்குச்சென்று பாபாவை தரிசித்து அவரது கைகளில் தாதா கொடுத்த சால்வையை கொடுத்துவிட்டு ஒரு ஓரமாக நின்றனர் துணியைப் பெற்றதும்தான் தாமதம். பாபா ஆந்தத்தால் மகிழ்சி கூத்தாடினார்.
என் பாலா எனக்காக ஒரு சரிகை வேலைப்பாடுகள் செய்த சால்வையை அனுப்பியுள்ளார். ஆஹா அது எவ்வளவு அழகாயிருக்கிறது என்று கூறினார். பின்பு அந்த துணியை தன் தலையில் மீது சுற்றிக்கொண்டு துவாரகாமாயிக்கு வந்த ஒவ்வொரு பக்தர்களிடமும், பெருமிதத்துடன் அதைக் காணபித்து, பார் ! என் பாலா எனக்காக இந்த அழகிய பட்டாடையை அனுப்பியுள்ளார். என்று கூறி மகிழ்ந்தார்.
*****