7 ஆம் ஆண்டு துவக்க விழா.
7 ஆம் ஆண்டு துவக்க விழா.
சாந்தி வெங்கடாசலம்.
நமது சாயி மகராஜ் குருவைத் தேடி ஆன்மீக மாத இதழின் 7 ஆம் ஆண்டு துவக்க விழாவும், 73 வது இதழ் வெளியீட்டு விழாவும், ஆசிரியரின் “குருவைத்தேடி” தனிப்புத்தகம் வெளியீட்டு விழாவும் “முப்பெரும் விழாவாக” கடந்த 11.08.2024 ஞாயிற்றுக்கிழமை சென்னை அயனாவரம் இராமலிங்க சுவாமி சன்மார்க்க சத்திய சங்கத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு சீரடியில் இருந்து “வாழும் பாபா” ஸ்ரீ அச்சுதானந்த சுவாமிகள் அவர்கள் வந்திருந்து தலைமையேற்று சிறப்பித்தார்கள். விழா காலை 9.00 மணிக்கு தொடங்கியது.
முதல் நிகழ்ச்சியாக, திருமதி. ஜெயலட்சுமி தேவக்குமார், திருமதி. சுமதிராமமூர்த்தி, திருமதி. ஜானகி சீனிவாசன், திருமதி. திருமலைச் செல்வி, திருமதி. கோமதி, செல்வி. அட்சயாசாய், செல்வி.அமிர்தா, செல்வி. அட்சயா, மற்றும் சந்ரோதயம் ஆகியோரின் சாய் பஜன் நிகழ்ச்சி நிகழ்ந்தது.
அடுத்து திருமதி. சாந்தி வெங்கடாச்சலம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களின் அறிமுகம் நடந்தது. அனைவருக்கும் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்கள்.
திரு. அச்சுதானந்தசுவாமிகள், திரு. சுந்தர்சாய், திரு. கலியன் சாய், திருமதி. மாதங்கி பாலாஜி, திருமதி.சுனந்தா ஆனந், திரு. வேணுகோபால், திரு. பிரசாத், திரு.அகஸ்டின் ஆகியோர் ஆசிரியருடனான தங்களது அனுபவங்களை பக்தர்களிடையே பகிர்ந்து கொண்டனர்.
திரு. கோபால் அவர்கள் ஆசிரியரைப்பற்றிய சிறப்பான பாராட்டுக் கவிதை ஒன்றை வாசித்தளித்தார். ‘குருவருள் வேண்டி’ திரு. அசோக்குமார் அவர்கள் கண் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த போதும் நிகழ்ச்சியின் இறுதிவரை இருந்து சிறப்பித்தார்.
விழாவில், திரு. உதி மூர்த்தி, திரு. சந்திரன், திரு.இராமமூர்த்தி, திரு.இராதா சீனிவாசன், கோபுரம் டி.வி திரு.பிரசாத், திரு.பிரபாகரன், திரு. வெங்கடேசன், கோவை தீபக், கார்த்திக், இரவி, பாலமுரளி மற்றும் ஏராளமான சாய் பக்தர்கள் கலந்து கொண்டு சிறிப்பித்தனர்.
மதியம் 12 மணிக்கு, 73 வது இதழையும், “குருவைத் தேடி” தனிப் புத்தகத்தையும் “வாழும்பாபா” திரு. அச்சுதானந்தா சுவாமிகள் அவர்கள் வெளியிட, ஆசிரியரின் அன்னை. திருமதி. இந்திரா வெங்கடாசலம் அவர்கள் பெற்றுக்கொண்டு சிறப்பித்தார்கள்.
மதியம் 1.00 மணிக்கு அற்புத சாயிபாபா ஆலய அர்ச்சகர் திரு.சேகர் அவர்கள் பாபாவிற்கு சிறப்பு ஆரத்தி செய்தார். அதைத்தொடர்ந்து அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
மதியம் 2 மணிக்கு, சாயி சேவை செய்த 15 நபர்களுக்கு சாயி மகராஜ் குருவைத்தேடி மாத இதழின் 7 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திரு. அச்சுதானந்தா சுவாமிகளின் கைகளால் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
மதியம் மூன்று மணியளவில் கோவை ஆவோ சாயி குழுவினரின் தலைமையில், சாயி பஜனுடன் பல்லக்கு ஊர்வலம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் பல்லக்கினை தூக்கி ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இறுதியாக மாலை 4 மணிக்கு மங்களாரத்தி செய்து விழாவினை நிறைவு செய்தனர்.
விழாவினை தொடங்கியதில் இருந்து இறுதிவரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி எங்களுடன் உறுதுனையாக இருந்த கூத்தனூர், திரு. சாய் சரவணன் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஆண்டு விழா மிகச்சிறப்பாக நடைபெறுவதற்கு பலவிதங்களிலும் எங்களுக்கு பேருதவிகள் செய்த அனைத்து சாய் சொந்தங்களுக்கும் எங்களது பணிவான நன்றியினை அவர்களது பொற்பாதங்களில் சமர்ப்பித்து நிறைவு செய்கின்றோம்.
நன்றி! நன்றி! நன்றி!