சாய் பாபாவின் கருணை!

சாய் பாபாவின் கருணை!

சாய் பாபாவின் கருணை!

பாபாவின் மேல், பக்தியும் நம்பிக்கையும் உயிரென இருந்தவர் நானா. சாய் பாபாவின் மீது அவர் கொண்டிருந்த அன்பும், நம்பிக்கையும் அளவில்லாதது. அவரது அன்பையும், நம்பிக்கையையும் சோதிப்பதைப் போன்று அவரது வாழ்க்கையில் ஒரு சோதனை வந்தது.

நானாவின் முதுகில் ஒரு பெரிய கட்டி வளர்ந்தது. அந்தக் கட்டி நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டே இருந்தது. அது தாங்கவே முடியாத அளவுக்கு கடும் வலியை கொடுத்தது. மருந்து, மாத்திரை, வைத்தியம் எல்லாம் முயன்றும் வலி மட்டும் குறையவே இல்லை.

இரவும் பகலும் வலியில் துடிதுடித்தார் நானா. இந்நிலையிலும் அவரின் மனதில் ஒரு எண்ணம் வழுவாக எழுந்தது. அதாவது தன்னிடம் வரும்“பக்தர்களின் துன்பத்தை தன் மேல் ஏற்றிக்கொண்டு, அவர்களை குணமாக்குபவர் பாபா, நாமும் அந்த வலியை பாபாவுக்கு கொடுக்கக் கூடாது என்பதே அது!

இந்த எண்ணத்தாலேயே, பாபாவிடம்  நேரடியாக வேண்டிக்கொள்வதைத் தவிர்ந்தார் நானா. ஆனால் வலி எல்லையைத் தாண்டியது. வேறு வழியின்றி, அவர் ஆங்கிலேய மருத்துவரிடம் சென்றார். மருத்துவர்கள் அவரது முதுகுக் கட்டியை பரிசோதனை செய்து, “அறுவைசிகிச்சை தான் ஒரே வழி
ஆனால் அது மிகவும் ஆபத்தானது” ஆயினும் காலதாமதம் இல்லாது நாளை காலையிலேயே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினர். இந்த வார்த்தைகள் நானாவின் மனதில் மரண பயத்தை விதைத்தன. 

அன்று இரவு நானா என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல், சாய் பாபாவின் படத்தை எடுத்து, தன் தலையணைக்கு அடியில் வைத்து கொண்டு கண்ணீர் விட்டார். பின்பு “என் உயிர் உன் கையில் பாபா” என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே தூங்கினார். அடுத்த நாள் நடந்தது ஒரு அதிசயம்

அடுத்த நாள், அறுவை சிகிச்சை செய்யப்படுவதற்கு சற்று முன், மருத்துவர்கள் அறுவைசிகிச்சைக்கு தயாராகிக்கொண்டிருந்தனர். அந்தநாளில் இன்றிருக்கும் வசதியான கட்டிடங்கள் இல்லையாதலால் அறுவை சிகிச்சை செய்யும் கட்டிடம் சாதாரண ஓட்டுக் கட்டிடமாக இருந்தது. அதில் நானா படுக்கையில் குப்புற படுக்க வைக்கப்பட்டிருந்தார். அறுவைச் சிகிச்சையை நினைத்து நானா பயத்தில் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தார். 

அப்போது மேலிருந்து திடீரென ஒரு ஓடு சரியாக அவர் முதுகிலிருந்த கட்டியின் மீது விழுந்தது! அடுத்த நொடி கட்டி உடைந்து அதில் இருந்து ரத்தமும், சீலுமாக வெளியேறியது. அந்த நேரத்தில் ஏற்பட்ட வலி சொல்ல முடியாத அளவுக்கு கடுமையானது! நானா அலறினார், கதறினார்!

உடனடியாக மருத்துவர்கள் ஓடி வந்தார்கள். நானாவின் முதுகை சுத்தம் செய்து விட்டு சோதனை செய்து பார்த்ததும் அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்! ஆம் ஓடு விழுந்த இடத்தில் அறுவை சிகிச்சை செய்து சுத்தம் செய்ததுபோல் இருந்தது. இனி அறுவை சிகிச்சை தேவையே இல்லை! என்று மருத்துவர்கள் கூறினார்கள்.

இந்த வார்த்தைகளை கேட்டதும், நானாவின் கண்கள் கண்ணீரை உகுத்தது. 
ஆனால் அது வலியின் கண்ணீர் அல்ல, அது நன்றியாலான கண்ணீர்! சில நாட்களுக்குப் பிறகு, உடல் பூரணமாக குணமடைந்தபின் உடனடியாக பாபாவின் தரிசனத்திற்கு சென்றார் நானா. ஷிர்டி சென்று, சாய் பாபாவை தரிசிக்கச் சென்றார். 

நானாவைப்பார்த்த பாபா, சுற்றி இருந்த பக்தர்களிடம் சிரித்தபடி இந்த வார்த்தைகளைச் சொன்னார். இந்த நானாவின் முதுகில் கட்டி ஒன்று வெகுநாட்களாய் துன்பம் கொடுத்துக் கொண்டிருந்தது. நான் அந்தக் கட்டியை என் விரலால் அழுத்தி உடைத்துவிட்டேன்!”

இந்த வார்த்தைகளை கேட்ட நானா,
அதிர்ச்சியிலும் ஆனந்தத்திலும் உறைந்து போனார். என் முதுகில் ஓடு விழுந்தது  விபத்து அல்ல, அது பாபாவின் அருள்! அவர் உடனே பாபாவின் பாதங்களில் விழுந்து, கண்ணீர் மல்க வணங்கினார்.

மருத்துவர்களால் முடியாததையும்,
பக்தியின் மூலம் சாய் பாபா செய்யும் அதிசயங்கள் ஏராளம்! ஏராளம்! அவரிடம் நம்பிக்கை வைத்தால், எப்பேர்பட்ட கொடிய நோயில் இருந்தும், பிரட்சனைகளில் இருந்தும் நம்மை காப்பாற்றும் கருணை தெய்வம் அவர்!

******