உணர்வும், உணர்ச்சியும் குருவின் விளக்கம்

உணர்வும், உணர்ச்சியும் குருவின் விளக்கம்

உணர்வும், உணர்ச்சியும் குருவின் விளக்கம்

சொ.அகஸ்டின்.

“ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து”.  என்ற குறளில் ஆமை தன்னை பாது காத்துக்கொள்ள தனது நான்கு கால்கள் மற்றும் தலையை தன் ஓட்டுக்குள் ஒடுக்கிக்கொள்கின்றன. மேலும் ஐம்புலன்களையும் ஒடுக்கிக் கொள்வதால் மூச்சு காற்றை நிலை நிறுத்தும் ஆற்றலை பெற்று நீண்ட நாள் வாழும் உயிரினங்களில் ஒன்றாக வாழ்கின்றன. 

இவ்வாறாக மனிதன் தன் ஐம்புலன்கள் மூலம் ஏற்படும் ஆசையை அடக்கி ஆள்வதால் அடுத்த ஏழு தலைமுறைக்கு பாதுகாப்பாக வாழும் ஆற்றலையும் பெறலாம் என வள்ளுவ பெருமானார் கூறுகிறார். அதனால் தான் ஒவ்வொரு பெருங்கோவில்களிலும் ஆமையின் உருவத்தை பொறித்துள்ளனர்.

பெரும்பாலும் உணர்ச்சியே உணர்வை அடக்கியாள்கிறது. உணர்ச்சியை தூண்டும் செயல்களான பார்த்தல் , கேட்டல், நுகர்தல், சுவைத்தல், பேசுதல் ஆகியவை மூலமாக ஆசை வெளியேறுகிறது. அவ்வாசையின் விளைவால் எதன் மீது கவனம் செலுத்துகின்றோமோ அதையே பற்றாக மாற்றிக்கொள்கிறோம்.

அது கிடைக்கவில்லை என்றாலோ (அ) தன்னிடமிருந்து பரிக்கப்பட்டாலோ, தன்னைவிட எளியவரிடத்தில் மிக இலகுவாக சினம் கொண்டு, பொறுமை இழந்து அப்பற்றை பற்றிக்கொள்ள பலவகையில் செயல் புரிகிறோம். இந்த உணர்ச்சியின் மூலம் ஏற்பட்ட செயலால் அங்கு ஆராய்ச்சியும் இருக்காது, அமைதியும் இருக்காது, செய்கின்ற செயலில் ஒரு நேர்மையும் இருக்காது.

அப்படி ஒவ்வொரு முறை செய்யும் போது பெரும்பாலும் துன்பம் ஏற்பட்டு  நமக்கு நஷ்டமாக உடலும் மனமும் தான் பாதிக்கப்படுகிறது . அதனால் தான் பகவான் சாய்நாதர்  ஐம்புலன்களும் அதனதன் வேலையை செய்யட்டும் மனம் என்னையே நினைக்கட்டும் என்று கூறுகிறார். 

குழந்தை பருவத்தில் நாம் உணர்ச்சியற்ற உணர்வு நிலையிலும், வாலிப பருவத்தில் உணர்வற்ற உணர்ச்சி நிலையிலும்தான் செயலாற்றி வருகிறோம். குழந்தை பருவத்தில் பசிக்கும் போதெல்லாம் அழுகையை உணர்வாக வெளிப்படுத்தி உண்டு வளர்ந்தோம். வளர்ந்த பின்பு பசிக்கவே இல்லை ஆனால் நமக்கு பிடித்த உணவைக் கண்டதும் உண்டு உடலை வளர்க்கின்றோம் .

இவ்வாறாக உணர்ச்சி உணர்வலைகளை மெது மெதுவாக விழுங்குகிறது மலைப்பாம்பு ஆட்டை விழுங்குவது போல, மேலும் உணர்ச்சியின் வெளிப்பாடானது  மெய்யறிவை தடைசெய்து இறையுணர்வு இறைத்தன்மை இவ்விரண்டையும் உணராத நிலையிலேயே  வைத்துக் கொள்கிறது.  ஆனால் உணர்வானது தொடர்ந்து தன் வேலையை செய்துகொண்டே இருப்பதால் தான் பக்தியாவது எஞ்சியிருக்கிறது.

அந்த பக்தியிலிருந்து தான் நம் குரு யோகி ஸ்ரீராம் பாபா அவர்கள் ஞானமார்கத்தை சத்சங்கம் மூலமாக ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் உலக மக்களுக்கு போதித்து வருகிறார். இவ்வாறாக நடைபெரும் சத்சங்கத்தில் ஒருமுறை நடைபெற்ற உரையாடலை இங்கே பதிய நினைக்கிறேன். அப்போது காலை நேரம் குருவிடம் ஒரு கேள்வியாக உணர்ச்சிக்கும் உணர்வுக்கும் உள்ள வேறுபாட்டை எவ்வாறு புரிந்து கொள்வது என்று கேட்கப்பட்டது. 

நம்குரு பாபாவின் சாயல் அல்லவா? எளியோர் புரியும் படி கூறினார். இதோ இங்கு இருக்கும் ஆப்பிளை சுட்டி காட்டி இதை பற்றி கூறுங்கள் என்று கேட்டால் நீங்கள் அதைபற்றி செவி வழியாக கேட்டதும் அதைபற்றி படித்ததையும்  வைத்து பக்கம் பக்கமாக உணர்ச்சி பொங்க கூறுவீர்கள் (அ) எழுதுவீர்கள். அதற்குள் விதை எத்தனை இருக்கிறது என்றால் தெரியாது ஆனால் அப்பழத்தை சாப்பிட்டால் அதை முழுமையாக அனுபவித்துவிடலாம். அதன்பொருட்டு உணர்ந்து அதன்சுவையையும் அதன் மனத்தையும் இரசித்து கூறலாம். எதையும் அனுபவியுங்கள் இறையணர்வும் அவ்வாறே என்று கூறினார். 

ஒவ்வொரு இறை வழி பாட்டிலும் ஒவ்வொரு உணர்வு இருக்கிறது ஆனால் அதை உணர்ச்சியின் மிகுதியால் உணரமுடியவில்லை அல்லது உணரக்கூடிய தன்மையை சொல்லி தருவதில்லை. இதையும் உணர்ந்த நம் குரு சாய் சங்கமம் மூலம் பஜனை, யாகம், குத்துவிளக்கு பூஜை, ஒளி தியானம், அன்னதானம் என நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு மெய்ஞான விளக்கங்களையும் , தீட்சையும் அளித்து மக்களை வழி நடத்தி வருகிறார். உலக மக்கள் குருவின் அருளை பெற்று பயன்பெறுமாறு இதன்மூலம் கேட்டுக்கொள்கிறேன். 
நன்றி வணக்கம்.

குரு வாழ்க குருவே துணை!
*****