இம்மையில் மறுமை

இம்மையில் மறுமை

“இம்மையில் மறுமை”

சொ. அகஸ்டின்.

இந்நிலவுலகில் இம்மையிலும் மறுமையை காண முடியுமா என்றால் பெரும்பான்மையான மக்களால் முடியவே முடியாது! சிலபேர் தம்மையே குருவாக பாவித்து  ஒரு சில தகவல்களை தெரிந்துகொண்டு மறுமையை பற்றி கூறிவருகின்றனர். அது முழுமையாகுமா என்றால் ஆகாது. ஏனெனில் அவர்கள் தம்மைத்தாமே குருவாக நியமித்துக் கொண்ட அந்தியத குருவாவார்கள்.

ஒரு சிலர் மட்டுமே இறைவனால் நியமிக்கப்பட்டு இந்நிலவுலகில் நியதகுருவாக செயலாற்றி மக்களோடு மக்களாக வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறு வாழ்ந்து வருபவரே நம்குரு யோகி ஸ்ரீராம் பாபா அவர்கள். அவர் மறுமையை முழுமையாக உணர்ந்ததால் இப்போதிருக்கும் வாழ்வியல் முறையை மாற்றி மறுமையை உணர்த்தி ஆனந்த வாழ்விற்குண்டான பாதையை சத்சங்கத்தின் மூலம் விளக்கிவருகிறார்.

அவ்வாறு நடக்கும் சத்சங்கத்தில் எனக்கு ஏற்பட்ட நிகழ்வை இங்கே பதிவிட விரும்புகிறேன். நான் குருவிடம் வந்த ஆரம்ப காலகட்டம் (2018) பிரதி மாதம் ஞாயிறு தோறும் காலை 6.00 மணிக்கெல்லாம் சத்சங்கத்தை தொடங்கிவிடுவார். முதல் ஆளாக கலந்துகொண்டு கடைசி ஆளாக வெளியே வரவேண்டும் என்று நினைப்பேன். ஆனால் ஞாயிறு தூக்கத்திற்கு நான் மட்டும் விதிவிலக்கா என்ன என்பது போல் நேரம் தள்ளியே கலந்து கொள்ளும் சூழல் நிலவும். 

பலநாள் முயற்சிக்கு பின் காலை 6.00 மணிக்கு கலந்து கொண்டதால் சற்றே பெருமைபட்டேன். அதை எப்படி நம்குரு உணர்ந்தாரோ தெரியவில்லை சத்சங்கம் நடைபெறும் போதே இடையில் கூறினார் “விதியை மதி வெல்லுமேயானால்  அதுவே விதியாகும்” என்றார். அது எனக்கே சொல்லபட்ட வார்த்தையாகவே நான்  உணர்ந்தேன். சிலமணி நேரம் கடந்தது.  நான் குருவிடம் கூறினேன், இங்கு நடக்கும் சத்சங்கம், தியானம், அன்னதானம், நான் யார் என்பதை அறிதல் போன்றவை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளதை அறிகின்றேன். மிக்க மகிழ்ச்சி. ஆனால் நான் ஏன் உங்களை சந்திக்க வேண்டும். அதன் தேவை என்ன என்று வினாவினேன்.

சில வினாடிகள் நம்குரு யோகி ஸ்ரீராம் பாபா அவர்கள் என்னையே உற்று நோக்கிவிட்டு பின்பு கூறினார்கள். நீங்கள் இங்கு தானாக வரவில்லை உம் தந்தை பனிரெண்டு ஆண்டுகளாக உம்மோடு பயணித்து உம்மை இங்கு சேர்த்த பின்பு தான் அவர் சாந்தி அடைந்தார் என்றார். என் தந்தை என்னோடு பயணித்ததை காட்டிலும் அவர் இறந்து பன்னிரெண்டு ஆண்டுகள் ஆனதை மிகச்சரியாய் எப்படி சொன்னார் என்பதில் தான் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

மேலும் சபைக்கு வருபவர்களின் நிலையை குரு பார்ப்பதில்லை மாறாக அவர்களின் ஆன்மாவின் நிலையையே பார்ப்பதாக கூறுவார். அவ்வாறாக தான் என் தந்தையின் ஆன்மாவையும் பார்த்திருக்கிறார் என்பதை உணர்ந்தேன்.

இவ்வாறாக ஆன்மாவை பற்றின தகவல்களை சத்சங்கத்தின் வாயிலாக கூறிக்கொண்டே இருப்பார். அதன்படி நம்குரு எழுதிய குருவைத் தேடி புத்தகம் வெளிவந்து சில மாதங்கள் இருக்கும் புத்தகத்தின் தொடர்புடைய போன ஜென்மத்தில் என்னுடன் இருந்த ஒரு நபர் வர இருக்கிறார் முடிந்தால் அவர் முகத்தை பார்த்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு கதையைக் கூறுகிறேன் என்று கூறினார். 

இருக்கிற ஜென்மத்தையே புரிந்துகொள்ள முடியவில்லை. இதில் போன ஜென்மமா என்று எனக்குள்ளே ஓடியதை காட்டிலும் அவரை காண்பதே எனக்கு ஆவலாக இருந்தது. ஆவல் குறைவதற்குள் குருவிற்கு அலைபேசி வந்தது. எதிர் திசையில் இருந்து யாரோ விலாசம் கேட்கிறார்கள். குரு அவருக்கு விலாசம் கூறிவிட்டு பாடத்திற்குள் சென்றுவிட்டார். 

நாங்களும் பின்தொடர்ந்ததால் கவனம் பாடத்திற்குள் சென்றது. சில நிமிடங்கள் கழிந்தது எப்போதும் போல் குருவை சந்திக்க நபர்கள் வருவது வழக்கம். அதுபோல் ஒரு இளைஞர் வந்தார். அவர் முகம் பூமியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது. குருவிடம் ஆசி வாங்கினார் குரு அவரை அமரசொன்னார் அவர் அமரவில்லை இருவரும் சில வினாடிகள் பேசினார்கள். அவர்கள் பேசியது எவர் செவிக்கும் எட்டவில்லை புறப்படுகிறேன் என்று கூறிவிட்டு நிமிர்ந்து பார்க்காமலே புறப்பட்டு விட்டார். 

இந்நிகழ்வு மின்னல் போல் நடந்து முடிந்தது. எங்களை பார்த்து குரு கேட்டார் வந்தவரது முகத்தை பார்த்தீர்களா என்றார். அப்போதுதான் நினைவுக்கு வந்தது குரு சொன்ன நபர் இவரென்று, ஆனால் குரு கூறிய கதைகளை கேட்க ஆரம்பித்ததால் அவர் கூறியதை மறந்துவிட்டதால் வேறுவழியில்லாமல் மௌனத்தை பதிலாக கொடுத்தோம். 

இவ்வாறாக பல நிகழ்வுகள் சத்சங்கத்தில் நடப்பதுண்டு ஒருவருடைய ஆன்மா அல்லல்படுவதும், அமைதி அடைவதும் மரணத்திற்கு பின்பு நிகழும் நிகழ்வாகும் ஆனால் மரணம் என்ற சொல்லை கேட்டவுடன் மக்கள் திடுக்கிடுகிறார்கள். அதற்கு காரணம் பொன், பொருள் அதிகாரம், ஆடம்பரம், புகழ் இவைகளை விட்டு பிரிந்துவிடுவோமோ என்றும் மற்றும் பலர் மனைவி, மக்களை விட்டு பிரிந்துவிடுவோமோ, இன்னும் பலர் தாய், தந்தையர், சகோதர, சகோதரிகள், உற்றார் உறவினர் நண்பர்களை விட்டு பிரிந்து விடுவோமோ என்ற சிந்தையோடு இருக்க,

வேறு சிலரோ முரட்டு குணத்துடனும் வெட்டுக்கும், குத்துக்கும், கொள்ளைக்கும் துணிந்து தீய செயலில் ஈடுபடுகின்றனர் . அவர்கள் மரணத்திற்கு சிறிதும் அஞ்சாதவராய் எந்த நேரத்திலும் மரணம் வரலாம் என்ற சிந்தனையோடு  செயல்பட்டு சித்தாந்தம் ஏதும் இல்லாமல் செயலாற்றி வருகின்றனர் .

இன்னும் ஒரு வகையார் உண்ணுவதும் உறங்குவதும் சுகமாய் இருப்பதை தவிர வேறு ஒன்றையும் எண்ணாதவராய் கண்டதே காட்சி! கொண்டதே கோலம்! என்று நினைத்து கடவுளும் இல்லை ஆத்மாவும் இல்லை முன் ஜன்மமும் இல்லை பின் ஜன்மமும் இல்லை பாவமும் இல்லை புண்ணியமும் இல்லை என்று சகட்டு மேனிக்கு பேசிவிட்டு எப்படியாவது பணத்தை சம்பாதித்து சுகமாய் வாழ்வதே சொர்க்கம் அப்படியில்லாமல் வாழ்வதே நரகம் என கூறிகொண்டு வாழ்கின்றனர் .

மேலே குறிப்பிட்ட இம்மூன்று நிலையிலுள்ள மக்கள் என்றைக்காவது மறுமையை பற்றி எண்ணி இருப்பார்களேயானல், இந்நேரம் நம்குரு யோகி ஸ்ரீராம் பாபா விடம் சரணாகதி அடைந்திருப்பார்கள். அவரை சந்தித்த பின்பு பிறருக்கு தீங்கு செய்யாதிருத்தலும், ஆசை படாதிருத்தலும், பற்றற்று இருத்தலும், அனைத்து உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதலும் போன்ற சிந்தனை எட்டியிருக்கும் அவ்வாறு செயலாற்றும் போது இம்மையில் இன்பமாக வாழும் கலையை கற்றுக்கொள்ளலாம்.

ஆனால் அவ்வாறு செய்யாமல், மறுமையை உணர்த்த கூடியவரிடத்தில் இழந்ததைக்கூறி மீண்டும் அதை பெற்றுத்தர வேண்டி  காத்திருப்பவரே அனேகர் அனேகர். ஆகவே அன்பர்களே ! நம்குரு வின் ஆற்றலை புரிந்துக்கொண்டு அவர் பாதத்தில் சரணாகதி அடைந்து விடுங்கள் “இனி பிறவா வரத்தை அளிக்க கூடியவர் பிறப்பின் பலனையும் அளிப்பார்” 

நன்றி வணக்கம்.
குரு வாழ்க குருவே துணை.