குருஜியின் அருள்மொழிகள்
யோகி ஸ்ரீராம் பாபா அவர்கள் தினமும் வழங்கும் ஞான மொழிகள். படத்தைத் தொட்டால் பெரிதாகக் காணலாம்.
-
“உங்களால் உங்களது மனதை, எதையும் நினைக்காமல் சும்மாயிக்கச் செய்தால் அதுவே ஆத்ம ஞானம். அதுவே ஆன்மாவின் இயல்பு. அது உங்களை பிரம்மத்திடம் கொண்டு சேர்க்கும்.”
-
“நீங்கள் உண்மையிலேயே சத்குருவை தேடினீர்கள் என்றால் பரம சத்தியமாக கடவுளே உங்களுக்கு நேரடியாக உதவி செய்வார்.”
-
“உங்களைப் பற்றிய விமர்சனங்கள் உங்களுடையதன்று. அதன் மீது மனதை வைக்காதீர்கள். மனம் மாயையின் எஜமானன் அதை வளர்த்துவிடும்.”
-
“எவன் ஒருவன் தன்னை அறிவதை விடுத்து அடுத்தவனை அறிய நினைக்கிறானோ அவன் ஒருகாலும் ஆனந்தம் என்பதை அறிய மாட்டான்.”
-
“எந்த ஒன்றிலும் எதுவுமில்லை என்று கூறிவிடாதே! காலி டம்ளரிலும் காற்று இருப்பதை மறந்து விடாதே!”
-
“தங்களுடைய எண்ணங்கள் நிறைவேறவே பெரும்பாலான மனிதர்கள் கடவுளை வழிபடுகிறார்கள். மகான்களை வழிபடும் சிலரே கடவுளை காண வேண்டும் என்று உணர்கிறார்கள்.”
-
“‘நான்’ என்கிற மனம் அடங்க வேண்டுமானால், மனம் எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் செல்லுங்கள். பின்பு சென்றது சரியா என்று சிந்தியுங்கள். மனம் அடங்கும்.”
-
“இலக்கை அறியாதவன் ஓடுவதில் பயனில்லை. இலக்கை அறிந்தவன் ஓடாமல் இருப்பதில் பயனில்லை.”
-
“‘பொறுமை’ என்றால் அலுப்புடன் காத்திருப்பதல்ல! ஒருவித மகிழ்ச்சியுடன், பரவசத்துடன், யாரையும் குறைகூறாமல், உற்சாகத்துடன் அன்புடன் காத்திருத்தல்.”
-
“நாள்தோறும் சாதுக்களை தரிசனம் செய். நேர்மையாக வாழ்க்கையை நகர்த்து. இறக்கும் பொழுது தூய்மையானவனாக இருப்பாய்.”
-
“அசிங்கத்தின் மேல் கட்டப்பட்ட அலங்கார மேடைதான் “அதிகாரம்” என்பது.”